tamilnadu

img

தேவையின்றி வெளியில் சுற்றுவோரை கைது செய்க: நீதிமன்றம்

சென்னை ஏப்.10- ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களைக் கைது செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவுதலைத் தடுக்க ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கக் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை கடைகள் திறக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவையும் மீறி பலர் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இவர்களைக் கண்காணிக்க காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் பல ஆயிரக்கணக்கான வாகனங்களை இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் அலட்சியமாக வெளியே சுற்றித்திரியும் நபர்களை அடக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவைப் பிறப்பித்து உள்ளனர்.