tamilnadu

img

சுனாமி: நீங்காத சோகத்தில் கடலோர மக்கள்!

சென்னை, டிச. 26- சுனாமியின் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,  சென்னை, கடலூர், நாகை, குமரி உள்ளிட்ட கடலோரப்பகுதி யில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி னார்கள். கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த  நிலநடுக்கத்தால், இந்தியப் பெருங்கடலில் உருவான ஆழிப்பேரலைகள், தமிழகத்தின் கடலோரப்பகுதியை தாக்கின. இந்த சுனாமி, சென்னை, கடலூர், வேளாங் கண்ணி, நாகை, வேதாரண்யம், மற்றும் குமரி மாவட்டத்தின் குளச்சல் உள்ளிட்ட இடங்களில் 7 ஆயிரத்து 941 பேரின் உயிரை காவு வாங்கியது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையிலிருந்து ஊர்வ லமாகக் சென்று,  சுனாமி நினைவு ஸ்தூபிக்கு மலர்வளை யம் வைத்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். சுனாமி யில் உயிரிழந்தவர்கள் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. சீர்காழி அருகே உள்ள திருமுல்லைவாசல் மீனவ கிரா மத்தில், பேரணியாக வந்து சுனாமி நினைவிடத்தில் மெழுகு  வர்த்தி ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். இதே போல பழையார், தொடுவாய், பூம்புகார், வானகிரி உள்ளிட்ட  10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது.

கடலூர்

சுனாமி தாக்கியதன் 15 ஆம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு கடலூர் முதுநகர், சிங்காரத்தோப்பு, தேவனாம் பட்டினம், சில்வர் பீச் ஆகிய இடங்களில் மீனவப் பெண்கள்  ஊர்வலமாகச் சென்று கடலில் பால் ஊற்றி, மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நாகை மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில், கைத்த றித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் அஞ்சலி  செலுத்தப்பட்டது. பின்னர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தி னார்கள்.

சென்னை

சென்னை ராயபுரம், காசிமேடு கடற்கரையில் சுனாமி  நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நினைவுத் தூணை  திறந்து வைத்தார். அதன் பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை மயிலாப்பூர் நொச்சிக் குப்பத்தில், சுனாமி நினைவு தினத்தையொட்டி 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல், காசிமேடு இந்திரா நகர் பகுதியில் தி.மு.க. எம்.பி. டாக்டர் கலா நிதி வீராசாமி தலைமையில், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி  செலுத்தப்பட்டது. பின்னர் ஊர்வலமாகச் சென்று கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

குமரி

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவ கிராமத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்லவில்லை. ஊர்வலமாகச் சென்று உயிரிழந்த வர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி  கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி சங்குகுழி காலனி கடற்கரையில் சுனாமி  நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் மற்றும் குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். 


 

;