tamilnadu

img

தலைநகரை கலவரபூமியாக மாற்றிய காவல்துறை!

சிஏஏ-வுக்கு எதிராக போராடியவர்கள் மீது கொடூரத் தாக்குதல்

சென்னை, பிப்.15- இந்திய மக்களை பிரித்தாளு வதற்காக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தத் சட்டம், சிஏஏ, என்பிஆர் சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லியில் தொடர்ந்து போராடி வரு கிறார்கள். தமிழகத்திலும் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சி கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ச்சியாக பல்வேறு இயக்கங் களை அறவழியில் நடத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக தலை நகர் சென் னையின் தங்க சாலை பகுதியிலுள்ள லாலாகுண்டாவில் வெள்ளிக்கிழமை (பிப்.14) அன்று இஸ்லாமிய அமைப்பு கள் தர்ணா போராட்டம் நடத்தின.

ஆதரவுக் கரம்

இந்த போராட்டத்தில்  “நோ நோ என்ஆர்சி, சிஏஏ, என்பிஆர்” என்ற கோரிக்கை பதாகைகள் ஏந்தியபடி பெண்கள், குழந்தைகள், இளைஞர் கள், மாணவர்கள் என ஆயிரக்கணக் கில் பங்கேற்று அமைதியாக போரா ட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் முஸ்லிம் அமைப்புகள் மட்டுமன்றி இந்துக்கள், சமூக செயல்பாட்டாளர் கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட பல அமைப்பினர் பங்கேற்றனர். 

காவல்துறை அட்டூழியம்

குடியுரிமைச் திருத்தச் சட்டத்திற்கு எதிரான இந்த போராட்டத்தில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத காவல்துறை கூடுதல் ஆணையர் தின கரன், இணை ஆணையர் கபில்குமார் தலைமையில் குவிந்த காவலர்கள் அனைவரையும் உடடினயாக கலைந்து செல்ல வேண்டும் என்றனர். ஆனால் கூட்டத்தினர் போராட்டத்தை தொடர்ந்த னர். அப்போது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அடுத்த நிமிடமே, தடுப்புகளை தள்ளிவிட்டு பெண்கள் என்று கூட பாரா மல் காவல்துறையினர் கண்மூடித்தன மாக தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தால் பதற்றம் அதி கரித்தது. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் ஒருவரை யொருவர் சங்கிலியாக பிணைத்து நின்றனர்.  கோபத்தின் உச்சத்திற்கு சென்ற காவல்துறையினர் தங்கள் கையில் சிக் கியவர்களிடம் ருத்ரதாண்டவமாடினர். ரத்தம் சொட்டசொட்ட அடித்து விரட்டி னர். இந்த சம்பவத்தின்போது இரு வருக்கு மண்டை பிளந்தது. ஒருவரது கை முறிந்தது. பர்தா அணிந்த சில பெண்களின் முடியை பிடித்தும் அடித்து இழுத்துச் சென்றனர்.

அதிர்ச்சியில் முதியவர் மரணம்

காவலர்களின் தடியடியிலிருந்து தப்பிய சிலர் அருகில் இருந்த வீடு களுக்கு ஓடியபோது விரட்டிப்பிடித்து தாக்கினர். இந்த சம்பவத்தின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு லாலாகுண்டா 6 ஆவது தெருவைச் சேர்ந்த பஸ்லுஸ் ஹக் என்ற 67வயது முதியவர் அதிர்ச்சி யில் அந்த இடத்திலேயே மரணம டைந்தார்.

ஆவேசம்

தில்லியைப்போன்றே சென்னையி லும் மூர்க்கத்தனமான தாக்குதல், கல வரத்தை காவல்துறையே அரங்கேற்றி யது. நள்ளிரவு வரைக்கும் போராட்டம் தொடர்ந்தது. காவல்துறையின் கொடூரத் தாக்குதல் சம்பவம் மாநிலம் முழுமைக்கும் காட்டுத் தீயாக பரவிய தால் ஆங்காங்கே காவல்துறை மற்றும் மாநில அரசை கண்டித்து சென்னை யில் அண்ணாசாலை, ஆலந்தூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தினர். இதேபோன்று, மதுரை, திண்டுக்கல், நாகர்கோவில், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலும் நடந்த போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய அமைப்பினருடன், வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படு வார்கள் என்று கூறிய அவர், யாரும் போராட்டங் களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இந்த பேச்சு வார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப் பட்டதை அடுத்து கைதானவர்கள் விடு விக்கப்பட்டனர். இதையடுத்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் கை விடப்பட்டன.

நெல்லை

காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ஏராளமானோர் ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த தால் பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட் டம் செய்தனர்.

திருச்சி

திருச்சியில் கண்டோன்மென்ட் எம்ஜிஆர் சிலை, மற்றும் தலைமை தபால் நிலையம் அருகில் நூற்றுக்க ணக்கானோர் சாலைமறியலில் ஈடு பட்டனர்.  பாலக்கரை ரவுண்டானா அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப் பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மறியல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை யில் டிஎஸ்பி அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடந்த வந்த இஸ்லாமிய அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடு பட்டனர்.  கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் கொரநாட்டுக் கருப்பூர் புறவழிச் சாலையில் அனைத்து ஜமாத் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற் றது. இதேபோல் தலைமை தபால்நிலை யம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பத்தில் இஸ்லாமியர்கள் கண்டன கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பண்ருட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசியல் கட்சியி னரும் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராள மான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். காவல்துறையை கண்டித்து இரண்டாவது நாளாக மாநிலத்தின் பல்வேறு பகுதியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வட சென்னை மாவட்டத்தில் மண்ணடி, வண்ணாரப் பேட்டை, மின்ட் உள்ளிட்ட பல இடங்க ளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டி.கே. ரங்கராஜன் எச்சரிக்கை

காவல்துறை தடியடி நடத்திய வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் சனிக்கிழமையன்று (பிப்.15) நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், காங் கிரஸ் கட்சி தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். டி.கே. ரங்கராஜன் தமது கண்டன உரையில், “நாட்டின் விடுதலைப் போ ராட்டத்தில் காந்தியின் வழிகாட்டு தலோடு முஸ்லீம், காங்கிரஸ், கம்யூ னிஸ்ட் கட்சியினர் போராடினர். இந்த போராட்டத்தில் பங்கெடுக்காத அரசி யல் கட்சிதான் மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது” என்றார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம் மக்களை மட்டு டிதன்றி பெரும்பான்மை இந்து மக்களையும் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் இந்து-முஸ்லீம்களை பிரிப்பது தான். இதனை எதிர்த்து போராடும் வேலையைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து செய்து வருகிறது என்றும் ரங்கராஜன் தெரிவித்தார்.








 

;