நாகை கடல் சீற்றம் எதிரொலி
நாகப்பட்டினம், நவ.10- நாகை மாவட்டத்தில் கடல் சீற்றத்தின் காரணமாகக் கடந்த 5 நாட்களாக ஆயிரக்கணக்கான மீனவர்கள் கட லுக்குச் செல்லவில்லை. இதனால் மீனவர்கள் குடும்பம் வறுமையில் வாடுகிறது. நாகப்பட்டினம் வட்டத்தில் நம்பியார் நகர், அக்கரைப் பேட்டை. கீச்சாங்குப்பம் போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாகவும், ‘புல்புல்’ புயலின் காரணமாக மீன் வளத் துறையினரின் எச்சரிக்கை காரணமாகவும் மீனவர்கள் கட லுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதே போல், வேதாரணியம் வட்டத்தில் உள்ள ஆறுக் காட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, புஷ்ப வனம் உள்ளிட்ட 10 கிராமங்களின் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 7000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 5 நாட்களாகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாததால், மீனவர் குடும்பங்கள் வறுமையில் வாடுவதால், உடனடி யாக, அரசு உரிய நிவாரணத் தொகை வழங்கவேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.