tamilnadu

செருப்புக் காலால் மாணவியை தலைமையாசிரியை உதைத்த கொடுமை

 நடவடிக்கை எடுக்காததால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள்

தஞ்சாவூர், செப்.4–  திருவையாறு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், செருப் புக் காலால் மாணவியை உதைத்த தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து புதன்கிழமை தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாத தால் பள்ளி வெறிச்சோடிக் கிடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருவை யாறை அடுத்த மேலதிருப்பந்துருத்தி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில், 65 மாணவ, மாணவி யர்கள் பயின்று வருகிறார்கள். 3 ஆசிரி யர், ஒரு தலைமையாசிரியர் என 4 ஆசிரியர்களும், சத்துணவு அமைப்பா ளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பணி யாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் இப்பள்ளியில் பயி லும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் கள் தினக்கூலி, விவசாயக் கூலி வேலை பார்த்து வருகிறார்கள்.

அப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அஜிஜாவை தலைமையாசிரியை சுந்தரி செருப்புக் காலால் உதைத்த தாக மாணவியின் தாத்தா லியாகத்அலி, கடந்த ஜூன், 25 ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய உதவி ஆணையர் சாமிநாதன் மற்றும் நடுக்காவேரி காவல்துறையில் புகார் மனு அளித்தார்.  தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்த தலை மையாசிரியையைக் கண்டித்து பெற் றாோர்கள் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த புகாரின் பேரில் தலைமையாசி ரியை சுந்தரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாக கல்வி துறை அதிகாரிகள், செயல்படுவதால் தலைமையாசிரியை சுந்தரியின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, பிள்ளை களை புதன்கிழமை முதல் பள்ளிக்கு அனுப்புவதில்லை என பெற்றோர்கள் முடிவு செய்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாததால், ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பில் தனியாக அமர்ந்திருந்தனர். மாணவ, மாணவிகள் இல்லாததால், வகுப்பறைகள் வெறிச்சோடி காட்சி யளித்தன. இதுகுறித்து பெற்றோர்கள் கூறிய தாவது; இவ்விவகாரம் தொடர்பாக, பல முறை கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை சம்பந்தப் பட்ட தலைமையாசிரியை மீது நட வடிக்கை எடுக்கவில்லை. மேலும், தலை மையாசிரியையை காப்பாற்றும் வித மாக பெரும்புலியூர் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு மாறுதல் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. அரசு உடனடி யாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

;