tamilnadu

கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்க கோரிக்கை...

கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் அமைந்துள்ள வருஷநாடு, வாலிப் பாறை, முத்தாலம்பாறை, கோம்பைத்தொழு உள்ளிட்ட கிராமங்களுக்கு தேனியில் இருந்து நாள்தோறும் எட்டு தனியார் மற்றும் 23 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட பின்னர் கடமலை-மயிலை ஒன்றியத்தில்அரசுப் பேருந்து சேவை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.  

வருஷநாடு,  மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்கு பத்து அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோம்பைத்தொழு, வாலிப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. முத்தாலம்பாறை கிராமத் திற்கு இயக்கப்பட்டு வந்த அரசுப்பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால்கோம்பைத்தொழு, வாலிப் பாறை, முத்தாலம்பாறை உள் ளிட்ட கிராமங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் 
மக்கள் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை கிராமங்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோக்களில் சென்று அதன்பின்னர் பேருந்து ஏறிச்செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. அரசுப் பேருந்து குறைக்கப்பட்டதை சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய் யப்படுகிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியப் பகுதிகளில் வழக்கமாக இயக் கப்பட்டு வந்த அரசுப் பேருந்துகளை முழுமையாக இயக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.