tamilnadu

img

தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகள் அறிவிப்பு

 சென்னை, மே 1- தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகள் எவை என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு மே 3 ஆம் தேதியுடன் முடிய உள்ள நிலையில், ஊரடங்கிற்கு பிறகும் சிவப்பு மண்டலமாக தொடரும் மாவட்டங்கள் எவை என பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிபேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக தொடர்கின்றன. ஆபத்து குறைந்த ஆரஞ்சு மண்டலங்களாக தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், கோயம்புத்தூர், கடலூர், சேலம், கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகியவை உள்ளன.