tamilnadu

காதலியின் மர்ம சாவைத் தொடர்ந்து காதலனுக்கும் கொலை மிரட்டல்

நடவடிக்கை எடுக்க சிபிஎம், மாதர் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன் 15- காதலி எரித்துக்கொலை செய் யப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், காதனுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள் ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்தி ந்திய ஜனநாயக மாதர் சங்கமும் வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திரு வரங்குளத்தை அடுத்த தோப்புக் கொல்லை கிராமத்தைச் சேர்ந்த விவேக் என்ற வாலிபரும், அதன் பக்கத்துக் கிராமமான இடையவ லைச் சேர்ந்த நாகேஷ் மகள் கல்லூரி மாணவி சாவித்திரியும் ஒருவரை காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இவர்க ளின் காதலுக்கு பெண்வீட்டார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு பெண்ணை தொடர்ந்து கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். மேலும், வேறு ஒரு மாப்பிள்ளைக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்கவும் முயற்சி நடந்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு விவேக்கை சாவித்திரி வலியுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் சாவித்திரியை அழைத்துக் கொண்டு கோயம் புத்தூர் செல்லும் வழியில் குளித்த லையில் போலீசாரால் மறிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். விசாணையில் விவேக் கிற்கு திருமண வயதை அடைவ தற்கு நான்கு மாதங்கள் பாக்கி இருப் பதை காரணம் காட்டி போலீசார் பெண்ணை காதலிடம் இருந்து பிரித்து பெற்றோரிடம் ஒப்படைத் துள்ளனர். பெற்றோருடன் தான் சென்றால் தன்னை கொலை செய்து விடுவார்கள், எனவே என்னை காப்பகத்திற்கு அனுப்பும்படி கெஞ்சியும் வலுக்கட்டாயமாக பெற் றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள் ளார்.  இந்நிலையில் கடந்த புதன்கிழ மையன்று காலை பெண் வீட்டாரின் அடி ஆட்களால் கொலை செய்யும் நோக்கில் விவேக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் இருந்ததால் விவேக் மரணத்திலிருந்து தப்பித் துள்ளார். மேலும், அன்றிரவு சாவித்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி சட லத்தை இரவோடு இரவாக எரித்து விட்டனர். 

இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தின ரின் உதவியுடன் கடந்த வியாழக்கிழ மையன்று மாவட்ட காவல் கண்கா ணிபாளரைச் சந்தித்து விவேக் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் சாவித்திரி கொலை செய் யப்பட்டு இருக்கவே அதிகமான வாய்ப்புள்ளது. எனவே, தீவிர விசார ணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. தலைவர்களும் இக் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து பெண் வீட்டாரைச் சேர்ந்த 7 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்தக்கும்பல் காதலன் விவேக்கை யும் கொலை செய்யும் நோக்கோடு ஒரு கும்பல் அலைவதாக கூறப்படு கிறது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி ஆகியோர் விவேக் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு திங்கள்கிழமையன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடந் துள்ள சம்பவத்தை விளக்கினர். ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுப்பதாகவும், விவேக்கி ற்கு உரிய பாதுகாப்பு அளிப்பதாக வும் தலைவர்களிடம் தெரிவித்துள் ளார்.

சிபிஎம் கண்டனம்

இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறி யது: பொதுவாக சாதிமறுப்புத் திரு மணங்களை சாதி வெறியர்கள் ஆத ரிப்பதில்லை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால், அரசியல் சட்டத்தை பாது காக்க வேண்டிய காவல்துறையும் சாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்படுவது மிகவும் வருந்தத் தக்கது. கண்டிக்கத் தக்கது. நடந் துள்ள சம்பவத்தை வைத்துப் பார்க்கும் போது கரூர் மாவட்டம் குளித்தலை காவல்துறையினர் சாதி வெறியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது கண் கூடாகத் தெரிகிறது.  பெற்றோருடன் சென்றால் தன்னை அனுப்பினால் கொலை செய்துவிடுவார்கள் என சாவித்திரி கூறியதை கொஞ்சம்கூட பொருட் படுத்தாமல் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். காப்பகத் திற்கு அனுப்ப மறுத்து தகுந்த பாது காப்புத் தருவதாக கூறிய காவல் துறை அதிகாரிகள் அவ்வாறு செய்ய வில்லை. இதனைத் தொடர்ந்தே சாவித்திரி எப்படி செத்தார் என்பது ‘காவல்துறையினருக்குத்’ தெரியா மலேயே எரியூட்டப்பட்டுள்ளார்.

இந்தத் தைரியத்தில்தான் காதலன் விவேக்கையும் கொலை செய்யும் நோக்கத்தோடு ஒரு ரவுடிக் கும்பல் அலைவதாக எங்களுக்குத் தகவல் வருகிறது. ஆனால், தொ டர்ந்து காவல்துறையினரின் செயல் பாடு  மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. எந்த நேரமும் விவேக் கொலை செய்யப்படலாமோ என்ற அச்சம் அவரது குடும்பத்தை வாட்டுகிறது. நடந்துள்ள சம்பத்தை யும், காவல்துறையினரின் அலட்சிய செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கியுள்ளோம். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். தவறும் பட்சத்தில் கட்சியின் சார்பில் காவல்துறைக்கு எதிராக மிகப்பெரிய போராட் டத்தை நடத்துவோம் எனத் தெரி வித்துள்ளார்.
 

;