வேடசந்தூர், ஜூலை 4- வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டியில் பள்ளி மாணவி கிணடற்றில் பிணமாகக் கிடந்தார். பாலியல் பலத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டார் என்று பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர். வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துச் சாமி ஒன்றிய செயலாளர் முனி யப்பன், கிருஷ்ணமூர்த்தி, சவட முத்து, சிக்கணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகள் பாலாமணி (13) திண்டுக்கலில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த (26.6.2020) இரவு வீட்டைவிட்டு சென்ற பாலாமணி மாயமானார். பெற்றோர்கள் மற்றும் உற வினர்கள் தேடியுள்ளனர். அடுத்த நாள் (27.6.2020) காலை பெரு மாள் என்பவரின் கிணற்றில் பாலா மணி பிணமாகக் கிடந்தார்.
பள்ளி மாணவி பாலாமணி பாலியல் பலத்தகாரம் செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டுள் ளார். குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று பள்ளி மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க மறுத்துவருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஜூலை 7-ஆம் தேதி எரியோடு பேருந்து நிலையம் முன்பு திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானம் ஆகி யோர் முன்னிலையில் எரியோட் டில் ஆர்ப்பாட்டம் செய்வது என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.