tamilnadu

img

அரிசிக்குப் பதில் பணம்: ஆளுநருக்கு சிபிஎம் கண்டனம்

புதுச்சேரி,ஜன.10-  அரிசிக்கு பதில் பணம் என்ற  ஆளுநர் கிரண்பேடியின்   தன்னிச்  சையான முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து செய்தி யாளர்களை சந்தித்த கட்சி யின் புதுச்சேரி பிரதேச செயலா ளர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ. பெருமாள், மூத்தத் தலைவர் தா. முருகன் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-  புதுச்சேரி காங்கிரஸ் அரசு  இலவச அரிசி வழங்குவதாகத் தான் தேர்தலில் வாக்குறுதி அளித்தது. அதன்படி தான் அரிசி யும் வழங்கப்பட்டு வந்தன. அரிசி  தர முயற்சிப்பதற்கு ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளார் என்று முதல்வரே குற்றஞ்சாட்டி வந்துள்ளார். மக்களிடம் விசா ரித்த வகையில் 90 சதவீதம் பேர்  பணம் வேண்டாம், இலவச அரிசி தான் வேண்டும் என்று தெரிவித்த னர். 

இந்நிலையில் துணை நிலை ஆளுநரிடம் யார் பணம்  வேண்டும் என்று கோரிக்கை  வைத்தது. அவர் தன்னிச்சையாக  முடிவெடுத்தது கண்டனத் திற்குரியது. உணவு பாதுகாப்பு  மசோதாவின் படி  நியாய விலைக்  கடை மூலம் அரிசி வழங்க வேண்டும் என்றுதான்  கூறப்படு கிறது. மேலும் நம்நாடு வறுமை பட்டியலில் மிக மோசமான நிலை யில் உள்ளது. எனவே அரசு இல வச அரிசியை மக்களுக்கு வழங்க  வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தொடர்ந்த வழக்கில் 7.5.2018ல் 8  வார காலங்களுக்குள் உள்  ளாட்சித் தேர்தலை நடத்த  வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதனை யடுத்து மாநில அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தேர்தல் ஆணையரை நியமித்து, உள்ளாட்சித் தேர் தலை நடத்த வேண்டும் என்றும்  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யது. இதன் மீது முதல்வரோ, ஆளுநரோ எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.  கடந்த ஆண்டு ஜூலை மாதம்  ஆளுநர் கிரண்பேடி ஆணை யரை நியமிப்பதற்கான விளம்ப ரத்தை வெளியிடச் செய்தார்.  முதல்வர் அதை சட்டப்பேரவை யில் நிராகரித்து புதிய ஆணை யரையும் நியமித்தார். இதை  மத்திய உள்துறை அமைச்ச கத்தின் நடவடிக்கை மூலம் ஆளு நர் கிரண்பேடி ரத்து செய்து, புதிய ஆணையரை தேர்வு செய்வ தற்கான விளம்பரத்தை வெளி யிட்டுள்ளார். ஆளுநருக்கும், முதல்வருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் அக்கறை யில்லை. மாநில தேர்தல் ஆணை யரை நியமிப்பதில் மட்டுமே அக்  கறை காட்டி வருகின்றனர். இத னால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.

தீர்மானம்

குடியுரிமை திருத்தச் சட்டத்  திற்கு எதிராக கேரள அரசு  சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதே போல் புதுச்சேரி பேரவை கூட்டத்  தையும் கூட்டி தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்கள்.

 

;