tamilnadu

img

பெரும்பான்மை இந்துக்களால் புறக்கணிக்கப்படும் இந்துத்துவா... ஆர்.விஜயசங்கர், ஃபிரண்ட் லைன் ஆசிரியர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவே எழுந்து நிற்கிறது. 1992ல் பாபர் மசூதியை இடித்தபோது கலைஞர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்த எழுச்சி, இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் உள்ளது. மக்களை பிரிக்க நினைத்தார்கள், மாறாக ஒன்று சேர்த்துவிட்டார்கள். அசாமில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இணைந்து போராடுகிறார்கள். கேரளாவில் இடது முன்னணியும், காங்கிரசும் இணைந்து போராடுகின்றன. ஒரு இந்து மாணவி இஸ்லாமியர்களை அல்ல, இந்தியாவை காக்கப் போராடுவதாக கூறுகிறார். பாஜக இந்த எழுச்சியை எதிர்பார்க்கவில்லை. போராடுகிறவர்களின் உடையை வைத்தே யார் போராடுகிறார்கள் என்பதை அறியலாம் என்று பிரதமர் கூறுகிறார். கும்பல் கொலை செய்பவர்களின் சிந்தனையோடு பிரதமரே பேசுவதுதான் நாம் எதிர்நோக்கியுள்ள அபாயம். பெரும்பான்மை இந்துக்கள் இந்துத்துவாவை புறக்கணிப்பதால்தான் இந்தியா இன்றைக்கு இருக்கிறது. தலைநகரில் அடித்தால் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். கட்சிகள் அரசியல் கூட்டணி அமைப்பது தனி. சமூக கலாச்சாரத்துறையிலும், ஒவ்வொரு தெருவிலும் அரசியல் கட்சிகள் குழு அமைத்து மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

;