tamilnadu

img

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராம்: அமைச்சர்!

சென்னை, ஜூலை 17- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு  பிறகு பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தா தது குறித்து மக்களவையில் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு செயலாக்க மானியம் வழங்க வில்லை என்று அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், கடந்த 3 வரு டத்துக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாத தால் உள்ளாட்சிகளின் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முன் வருமா? என்றார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றகுழுத் தலை வர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், “ உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்காமல் உள்ளதால் கட்ட மைப்பாக இருந்த உள்ளாட்சி அமைப்புகள் கட்ட மைப்பு இல்லாமல் உள்ளதால் பல பிரச்சனை களை சந்திக்க வேண்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டிருக்கும் பல ஆயிரம் கோடி இழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் எஸ்.பி.  வேலுமணி, “நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட தால் தள்ளிக்கொண்டே சென்றது. தேர்தல் ஆணை யம் சார்பில் தேர்தலுக்கான அட்ட வணையும் கொடுத்துள்ளனர். எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராகவே உள்ளது” என்றார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணையாக மத்திய அரசிடமிருந்து பணம் ஒதுக்கப்படும். இப்போது நிதி வருவதில் காலதாம தமாகியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் களை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

;