tamilnadu

img

முன்னாள் எம்எல்ஏ டி.கே.நல்லப்பன் மறைவு: சிபிஐ இரங்கல்

சென்னை,ஜூலை 26- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பி னரும், பெருந்துறை சட்ட மன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான டி.கே.நல்லப்பன் ஜூலை 26  அன்று கோவை மருத்துவ மனையில் காலமானார். அவருக்கு வயது 87. ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரு கில் உள்ள சீலம்பட்டியில் ஏழை விவசாய  குடும்பத்தில் பிறந்தவர். பள்ளிக் கல்வி யில் சேரக்கூட வசதியில்லாமல் கைத்தறி நெசவாளராகக் கூலி வேலைக்கு சென்றார். பிறகு, சைக்கிள் கடை வைத்தார். இளம் வயதிலேயே இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர்,   1980 ஆம் ஆண்டில் பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.  ஈரோடு  மாவட்டச் செய லாளர், மாநிலக் குழு உறுப்பினர் உள்ளிட்ட  பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். தோழரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துள்ளது.

;