tamilnadu

img

கருணாநிதி நினைவிடத்தில் திமுகவினர் மரியாதை

சென்னை, ஆக. 7- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினத்தில், மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  மலர்தூவி மரியாதை செலுத்தி னார். முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான  கருணாநிதியின் முதலாண்டு நினைவு தினம் தமிழகம் முழுவ தும் புதனன்று  அனுசரிக்கப் பட்டது. அதன் ஒரு பகுதியாக, தி.மு.க. சார்பில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இறுதி யாக, மெரினாவில் உள்ள கருணா நிதி நினைவிடத்தை பேரணி அடைந்தது.கருணாநிதி நினை விடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மரக்கன்று நட்டார். துரைமுருகன், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, உதயநிதி ஸ்டா லின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் சிலை திறப்பு

மாலையில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலக வளாகத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் உருவ சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார். இதில் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, கட்சியின் மூத்த தலைவர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.