“சுங்கச்சாவடி பிரச்சனைகளால் எனக்கு வரக்கூடிய வாக்குகள் பாதிப்பதால் வாக்காளர்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், வெட்கம்,ரோசத்தை மனதுக்குள் வைத்துக் கொண்டு நான் ஓட்டு கேட்பதைப் போல், சுங்கச் சாவடி ஊழியர்களும் வாகன ஓட்டிகள் எவ்வ ளவு திட்டினாலும் நிதானத்தை கடை பிடித்தால் எந்தப் பிரச்சனையும் வராது”.
கொரோனா ஊரடங்கு அமலாவதற்கு முன்பு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேசியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய தேவைகளுக்கான வாகன போக்குவரத்தை தவிர மற்ற போக்கு வரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகளின் எதிர்ப்புகளை யும் மீறி 27 நாட்களுக்கு பின்னர் சுங்கச்சாவடிகளை மீண்டும் திறந்தது மத்திய அரசு.
27 நாட்களாக கட்டணமில்லாமல் அத்தி யாவசிய பொருட் களை ஏற்றி வந்த வாக னங்கள் ஏப்ரல் 20ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏற்கனவே செலுத்தி வந்த கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். உதாரணத்திற்கு கார், ஜீப், வேன் ஒரு முறை ஒரு சுங்கச்சாவடியை கடக்க 40 ரூபாய் செலுத்திய நிலையில் தற்போது 45 ரூபாயாக உயர்த்தி உள்ளனர். பேருந்து, லாரிகள் 140 ரூபாயிலி ருந்து 145 ஆகவும், கனரக வாகனங்கள் 155 இலிருந்து 160 ஆகவும் பெரிய கண்டனர் லாரிகள் 265 லிருந்து 275 ஆகவும் கட்டணம் உயர்த்தியி ருப்பது ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது’ போல் உள்ளது.
ஊரடங்கு உத்தரவு இன்னமும் அமலில் இருக்கும் நிலையில் சுங்கச்சாவடிகளை திறந்தது மட்டுமின்றி கட்டணத்தையும் உயர்த்தி இருப்பது அநியாயம் என்றும் இதை உடனடி யாக தடை செய்ய வேண்டும் என்று திமுக, சிபிஎம், மதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலை வர்களும் போர்க் கொடி உயர்த்திய போதும் மத்திய அரசின் பாராமுகம் காட்டி வருகிறது. மாநில அரசும் முதலமைச்சரும் கண்டுகொள்ளா மல் மத்திய அரசுக்கு பச்சைக் கொடி காட்டி வருகிறார்கள்.
முதன் முதலாக 1992 ஆம் ஆண்டு அமைக் கப்பட்ட சுங்கச்சாவடிகளை 2008 ஆம் ஆண்டில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். மகா ராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய் 2,100 கோடி திட்ட மதிப்பில் சாலை ஒன்று 2012 ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்டது. அந்த சாலையில் 5 சுங்கச் சாவடி களை அமைத்து 5 ஆண்டுகளில் செய்த வசூல் தொகையோ ரூ.14,500 கோடியைத் தாண்டியது. இத்தகைய சுரண்டலுக்கு வழிவகுத்தது அன்றை க்கு ஆட்சி செய்தது பாஜக கூட்டணி அரசாகும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் 400க்கும் அதிகமாக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. போதாக்குறைக்கு தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டிலும் 40க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் உள்ளன. இருவழி, நான்கு வழி, ஆறு என வழி எத்தனை சாலைகள் அமைத்தாலும் இந்த சாலைக்கு பணி முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பாகவே அந்த சாலைகளுக்காக செலவழித்த தொகையை திருப்பி எடுப்பதற்கும் பராமரிப்பு என்ற போர் வையிலும் சுங்கச் சாவடிகளை அமைத்து கட்டணம் வசூலிக்கும் உரிமத்தை ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது மத்திய அரசு.
ஒப்பந்தம் எடுக்கும் தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் காலாவதியான பிறகும் தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் பகல் கொள்ளை நடத்துகின்றன. தென்மாவட்டங்களுக்கு சென்னையை கடக்கும் வாகனங்களும், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் செங்கல் பட்டு அருகே பரனூர், திண்டிவனம் அருகில் ஆத்தூர் ஆகிய சுங்கச் சாவடிகளை கடக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட தூரத்தில் நான்கு வழிச்சாலை அமைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம் ரூ.2 ஆயிரம் கோடியை தாண்டி இருக்கிறது. சாலை அமைக்க செலவு செய்தது. வெறும் ரூ.550 கோடி தான்.
வெறும் ரூ.550 கோடி தான்.
அதேசமயம் செலவுக் கணக்கு பல மடங்கு காட்டப்படுவதால் இன்னும் எத்தனை பத்தாண்டு கள் இந்த வசூல் தொடரும் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம். மேலும் ஊழியர்கள் என்ற போர்வையில் ஒவ்வொரு சுங்கச் சாவடிகளிலும் மொழி வித்தி யாசமின்றி குவிக்கப்பட்டிருக்கும் ரவுடிகளின் அட்டூழியமும் சொல்லி மாளாது.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வளைத்து தேசிய, மாநில சாலைகளை விரிவுபடுத்தி ஆங்காங்கே சுங்கச் சாவடிகளை அமைத்து ஆண்டாண்டு காலமாக நடத்தி வரும் கட்டணக் கொள்ளையால் தனியார் நிறுவனங்கள் கொழுத்து வருகின்றன. இதை கண்டித்து போராட் டங்கள் நடக்காதே மாநிலங்களே இல்லை. இந்தப் பின்னணியில், சத்தமில்லாமல் கொரோனா காலத்தில் கட்டணத்தை உயர்த்தி யிருப்பது மிகப் பெரும் அராஜகம் ஆகும். அமைச்சர் உதயகுமார் பேசியதை போல மானம், வெட்கம், ரோசத்தை மறந்து இந்த ஆட்சியாளர் கள், கொரோனா முடிந்தபிறகு எப்படியும் வாக்குக் கேட்டு வந்துதானே ஆக வேண்டும்!