பிரபல கூடைப்பந்து வீரரான கோபே பிரையன்ட் (41) மகள் கியானாவுடன் ஹெலிகாப்டர் விபத்தில் ஞாயிறன்று மரணமடைந்தார். இளசுகளுக்கு ரோல் மாடலாக வலம் வந்த கோபே பிரையன்ட்டின் திடீர் மரணம் அமெரிக்க மக்களை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க நகரின் வீதிகளிலும் கோபேவின் அஞ்சலி பதாகைகளுடன் மக்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர். விளையாட்டுத் துறையில் ஆர்வம் இல்லாத மக்கள் கூட கண்ணீருடன் காட்சியளிப்பதால் அமெரிக்க தேசமே கண்ணீர் கடலில் மிதக்கிறது. அமெரிக்கா மட்டுமின்றி கூடைப்பந்து விளையாட்டு தாக்கம் உள்ள நாடுகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றன. கிரிக்கெட், டென்னிஸ் துறையின் பிரபலங்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை அனுப்பி வருகின்றனர். குறிப்பாக ஆசியக் கண்டத்தில் நிறைய பேருக்கு கோபேவை தெரியாது என்றாலும் அவரின் புகைப்படத்துடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.