tamilnadu

img

பல விசித்திரங்களின் கலவையான தீர்ப்பு: கீ.வீரமணி

சென்னை,அக்.10 அயோத்தி தீர்ப்பு குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில். அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் அது காலிமனையில் கட்டப்படவில்லை.அதற்கு முன் கோயில் இருந்தது உறுதியாகவில்லை, ராம்லல்லா மட்டுமே மனுதாரர். ஒரு மனுதாரரின் நம்பிக்கையை மற்றொரு மனுதாரர் மறுக்க முடியாது. சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் சிலை 1949இல் வைக்கப்பட்டது. நிலம் யாருக்கும் சொந்தமல்ல - அரசுக்கே நில உரிமைச் சட்டப்படிதான் முடிவு செய்யப்பட்டு ள்ளது. முஸ்லீம்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்திக்குள் 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் வெற்றி - தோல்வி இல்லை  இது என்றும் கூறிவிட முடியாத பல விசித்திரங்களின் கலவையான தீர்ப்பு இது. இராமர் கோயிலை குறிப்பிட்ட பாபர் மசூதி இடத்திலே கட்டு வோம் என்பவர்களின் மகிழத்தக்க வெற்றியைத் தருகிறது இத்தீர்ப்பு. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம்தந்து மசூதி கட்டி வழிபாடு நடத்திக் கொள்ளுங்கள் என்பது ஒரு வகையான சமரச ஆறுதல் போன்ற தீர்ப்பு. மதக் கலவரங்கள் வெடித்து மக்கள் பலியாகக் கூடாது என்பதற்காகவே இப்போதைய தீர்ப்பு  என்று குறிப்பிட்டாலும்கூட, எதிர்காலத்தில் இந்தத் தீர்ப்பும், பெயர் குறிப்பிடாத நீதிபதியின்  சுமார் 116 பக்கக் கூடுதல்  கருத்துரைகள், வழக்குகள் போட மதவாதிகளுக்கு இடம் அளிப்பதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.