உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொது மொழி இருக்க வேண்டியது அவசியம்; அத்தகைய மொழி ஒன்று உண்டென்றால் அது இந்தி மொழிதான் என்றும் எனவே இந்தியை மட்டுமே ஒற்றை தேசிய மொழியாக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் அமித் ஷா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதேபோல புதிய கல்விக் கொள்கையை முடிவு செய்யும் முன்னே அமலாக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து வலுவான போராட்டம் நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்துகிறது.
கே.பாலகிருஷ்ணன்
திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர் ஈசன், பி.ஆர். சண்முகம், முத்துவிஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறையில் சந்தித்து ஆதரவினை தெரிவிக்க வந்த காட்சி. (கே.பாலகிருஷ்ணன் பேட்டி : 3)