tamilnadu

img

உத்திரமேரூர் அருகே  8 ஆம் நூற்றாண்டு சிலைகள் கண்டெடுப்பு

உத்திரமேரூர்:
உத்திரமேரூர் அருகே 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர்கால கொற்றவை, அய்யனார் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவருமான சு.பாலாஜி தலைமையில் வடிவேலு, கோகுலசூர்யா ஆகியோர் இணைந்து காவனூர் புதுச்சேரி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தன் தலையை தானே பலிகொடுக்கும் அரிகண்ட வீரன் சிற்பத்துடன் கூடிய கொற்றவை தேவி சிலையும், இரு பெண்கள் வாழ்த்தி வணங்கும் நிலையில் உள்ள அய்யனார் சிலையையும் கண்டறிந்தனர்.இதுகுறித்து வரலாற்று ஆய்வு மையத்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் மார்க்சியா காந்தி, பாலாஜி கூறுகையில்,“ கொற்றவை என்பது ஆதித்தமிழரின் முதல் தெய்வமாக தலைமைத் தெய்வமாக மறவர்களுக்கு போரில் வெற்றியைத் தருபவளாக விளங்கிய தெய்வமாகும்” என்றனர்.இந்த கொற்றவை சிலைகள் 4 அடி உயரமும், 2 அடி அகலமும் 8 கரங்களுடன் வலது முதுகின் அருகில் பெரிய சூலாயதத்துடன் காணப்படுகிறது. காவனூர் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானம் எதிரில் புளியமரத்தடியில் கவனிப்பாறின்றி கிடந்த சிலையை ஆய்வு செய்தபோது அய்யனார் சிலை என்பது தெரியவந்தது. இந்த சிலைகள் சுமார் 1,200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தை சார்ந்தது என்பதை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

;