tamilnadu

img

பொது சுகாதார மையத்தின் தேவையும் - அவசியமும்...

கொரோனா பாதிப்பால் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முடிவு செய்துஅக்டோபர் 16 பின்னர் காலை 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சைக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டவுடன் அங்கு பணியில் இருந்த செவிலியர் என்னுடைய இரத்த அழுத்தம் (BP), உடலில் ஆக்ஸிஜன் அளவு  (Oxygen Level), இரத்த மாதிரிகளை எடுத்து சோதனைக் கூடத்திற்கு அனுப்புதல், இசிஜி (ECG), சிடி ஸ்கேன், எக்ஸ்ரே X ray  என அனைத்து முதல் கட்ட பரிசோதனைகள் செய்தனர். கொரோனா தொற்றின் பாதிப்பின் அளவை அறிந்தவுடன் அதற்குரிய சிகிச்சையை உடனே துவக்கினர்.  நோய் எதிர்ப்பு ஊசி (Anti Biotic Injections) மற்றும் மருந்துகளுடன் சிகிச்சை அளித்தனர். 

உலக சுகாதார அமைப்பு கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவில் பொதுசுகாதாரம் குறித்த ஆய்வின்படி மக்கள் தொகை அடிப்படையில் 55,000 பேருக்கு ஒரு மருத்துவமனை, அதாவது11,000 பேருக்கு 1மருத்துவர் மட்டுமே உள்ளனர்.இந்தியாவில் இன்னும் 5 லட்சம் அரசு மருத்துவர்கள் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல மத்திய அரசும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 6 மாதம் முடிந்த சூழலில் இந்தியாவில்கொரோனா தடுப்பிற்கு 9000 மருத்துவமனைக
ளும் 90 லட்சம் படுக்கை வசதிகளும் இருப்பதாகதெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பு புதுச்சேரியில் உச்சத்தை அடைந்த போது துவக்கத்தில்தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கோவிட் சிறப்பு வார்டுகள் அமைக்க முன்வராததும் பின்னர் அரசு அம்மருத்துவமனைகளை சிபிஐ(எம்) உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட சமூகஅமைப்புகளின் கண்டனத்திற்கு பிறகே புதுச்சேரி அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

நான் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டதும் இயல்பாகவே கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பலருடனும் நேரடியாக பேச வாய்ப்பு அமைந்தது. தற்போது புதுச்சேரியில்  ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசாங்கமாக இருந்தாலும் சரி இதற்கு முன் புதுச்சேரியை ஆண்ட  என். ஆர். காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி இரண்டின் செயல்பாட்டிலும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதை அறிய முடிந்தது.  கொரோனாவினால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த ஆளும்/ எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் அரசு மருத்துவமனையை நம்பாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் சென்றது என்பதே பொதுசுகாதாரத்திற்கும், அதன் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும்  முன்னுரிமை அளிக்கவில்லை என்பதை அறிய முடியும். மேலும் F புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் 10 ஆண்டுகளாக பணியாற்றும் கடைநிலை ஊழியர்களின் மாதச் சம்பளம் ரூ.6000, 5000, 3000 மட்டுமே. 

1.கொரோனா தடுப்புப் பணி துவங்கி இரவுபகலாக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 5000/- மட்டுமே, அதுவும் கூட சரியாக வழங்கப்படுவதில்லை. 3. கொரோனா ஊரடங்கின் போது காண்டிராக்ட் அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களின் 3 மாதச் சம்பளம் கூட ஒரு விதமான போராட்டத்தை தொடர்ந்தே போடப்பட்டது. 

2. மருத்துவ கல்லூரி மாணவர் விடுதிகளில் தனிமைப் படுத்திக்கொள்ளும் செவிலியர்கள், மருத்துவர்களுக்கு கொரோனா ஊரடங்கு துவங்கிய ஓரிரு மாதங்களை தவிர உணவு கூட வழங்கப்படுவதில்லை. 

3. கொரோனா பெருந்தொற்று எனும் பேரிடரிலிருந்து மக்களை காப்பாற்ற இரவு பகல் பாராமல், பல்வேறு இன்னல்களை கடந்து சேவை என்ற ஒற்றை இலக்கோடு மக்களின் உயிர்நாடியாகச் செயல்பட்டு வரும்  பொது சுகாதாரமையங்களின் கட்டமைப்பை அனைத்து விதமான உயர்மருத்துவ சிகிச்சையளிக்கும் சூப்பர்ஸ்பெஷாலிட்டி (Super Speciality) மருத்துவமனைகளாக தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக பன்மடங்கு நிதி ஒதுக்கி பலப்படுத்துவதே சிறந்த மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்க முடியும். 

கேரளா துவங்கி கியூபா வரை கல்வி - சுகாதாரத்தை மேம்படுத்துவதில், கட்டமைப்புகளை பலப்படுத்துவதில் எப் பொழுதும் மக்கள் நலன் குறித்து சிந்திப்பது கம்யூனிஸ்ட் அரசுகள்தான் என்பது அனைவரும் அறிய வேண்டியது. அதே வேளையில் பேரிடரை எதிர்கொள்ள முன்களத்தில் நின்று மக்களுக்கு சிகிச்சை அளித்தது பொது சுகாதார மையங்களான அரசு மருத்துவமனைகளே. குறிப்பாக கொரோனா  பெருந்தொற்றிலிருந்து மக்களின் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சையை அளிக்க மத்திய/ மாநில அரசுகளின் வழிகாட்டுதல் என்பது அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதே தவிர தனியார் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டியது.  ஆகவே மக்களின் உயிர்காக்கும் மருத்துவ சேவையளிக்கும் பொதுசுகாதார மையத்தை பலப்படுத்திட உறுதியேற்போம். களம் காண்போம்.

கட்டுரையாளர்: அ.ஆனந்த், தலைவர்,  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  புதுச்சேரி

;