tamilnadu

img

பாஜக ஆணவத்தை அடக்கி பாடம் புகட்ட வேண்டும்! மாயாவதி ஆவேசம்

லக்னோ, ஏப்.16- பாஜகவினரின் வெறுப்புப் பிரச்சாரத்தால் உத்தரப்பிரதேச அரசியல் களம், நாளுக்கு நாள் சர்ச்சைப் பேச்சுக்களின் கூடாரமாக மாறிவருகிறது. சுல்தான்பூரில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி, முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும்; இல்லாவிட்டால் பின்னால் வருத்தப்பட வேண்டியது இருக்கும் என்ற தொனியில் பேசியிருந்தார்.உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் பேசுகையில், “ராமரையும் கிருஷ்ணரையும் அங்கீகரிக்காதவர் களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்”என்று கூறியிருந்தார்.இந்நிலையில், பாஜகவினரின் இந்த சர்ச்சைப்பேச்சுகளை சுட்டிக்காட்டியுள்ள பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, “மத்தியஅமைச்சர் மேனகா காந்தியின் மிரட்டலுக்குப் பின்னர்,இப்போது ஆதித்யநாத் முஸ்லிம்களை வெளிப்படையாக மிரட்டியுள்ளார்; எனக்கு வாக்களிக்காவிட்டால் வாழ்நாள் முழுதும் வேலைவாய்ப்பில்லாமல் இருக்க வேண்டியதுதான் என்று அவர் கூறியுள்ளார்; தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கைகளை மீறியும் பாஜகவினர் இப்படிப்பேசுகின்றனர்; எனவே,பாஜகவின் இந்த கொட்டத்தை அடக்குவதற்காகவாவது, அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என்றுகூறியுள்ளார்.

;