states

img

பசுக்கள்தான் எங்கள் தாய்; அதனை கடத்த விட மாட்டோம்.... அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆவேசம்....

திஸ்பூர்:
அசாம் மாநிலத்தில், பசுக் களைப் பாதுகாக்க விரைவில் மசோதா கொண்டுவரப் போவதாக அம்மாநில பாஜக முதல் வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.‘பசு எங்கள் தாய்.

எனவே, மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்க அரசியலமைப்பின் எல்லைக்குள் தேவையானஅனைத்து நடவடிக்கைகளையும் அசாம் அரசு எடுக்கும். பசுவை எங்கள் தாய் என்று நாங்கள் நம்புகிறோம். மேற்குவங் கத்தில் இருந்து மாடுகளைக் கடத்த இனி நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்றும் அவர்கூறியுள்ளார்.அசாம் முதல்வர் ஹிமந்தாபிஸ்வா, செவ்வாயன்று சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது இவ்வாறு கூறிய அவர், ‘மாடுகளை வணங்கும் இடங்களில், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது. இதற்காக, அனைத்து மக்களுமே திடீரென்று தங்கள் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று நான்அர்த்தப்படுத்தவில்லை.

நுகர்வோர் அல்லாத இடங்களில்மாட்டிறைச்சி உட்கொள்வதை மக்கள் கைவிட வேண்டும் என்றே நாங்கள் முறையிடுகிறோம். பசுவதை நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக இதைபேசுகிறோம்’ என்றும் தெரிவித் துள்ளார்.‘நாம் அனைவரும் பசுக் களை வணங்குகிறோம். பசுக்கள் தங்களது பால் மூலம் நம்மைவளர்ப்பதால், அதனை ஒருபுனித விலங்காக கருதுகிறோம். உண்மையில், இது பூமியின் தெய்வீக அருளின் அடையாளமாகும். எனவே, அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பசு பாதுகாப்பு மசோதாவை அறிமுகப்படுத்த எனது அரசு திட்டமிட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியும் சட்டமன்றத்தில் உரையாற் றியுள்ளார்.