cinema

img

உயிர் வாழ ஆக்சிஜன் இல்லாதபோது, ஜிஎஸ்டி வரி ஏன் செலுத்த வேண்டும்? நடிகை நிலா ஆவேசம்

மும்பை:
தனது குடிமக்கள் உயிர்வாழ ஆக்சிஜன் தர முடியாத மத்திய அரசு, எதற்காக, 18 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலிக்கிறது என்று பிரபல நடிகை நிலா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில், அன்பே ஆருயிரே, ஜம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நிலா. இவரது இயற்பெயர்மீரா சோப்ரா. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனாவால் கடந்த 10 நாட்களில் மட்டும், தனது குடும்ப உறுப்பினர்களில் இரண்டு பேரை பறிகொடுத்து விட்டதாக கண்ணீர் விட்டுள்ளார். ‘கடந்த ஏப்ரல் 29 அன்று எனது நெருங்கிய ஒருவரை இழந்தேன். அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைந்ததால் இறந்தார். அவருக்கு ஐசியு படுக்கை (ICU Bed) உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. படுக்கை கிடைத்த நேரத்தில், அவரது நுரையீரல் செயல்படவில்லை. இது ஒரு கொடூரமான மரணம். அல்லது கொலை என்றும் சொல்லலாம்.மே 5 அன்று, கொரோனா என்ற பயங்கரமான நோயால், எனது இன்னொரு உறவினரையும் இழந்து விட்டேன். 

கடந்த 1 வாரத்தில் எனது குடும்பத்தில் இரண்டு கொரோனா மரணங்களை சந்தித்து விட்டேன்’ என்று கூறியுள்ளார்.மேலும், இப்படி ‘தேவைப்படும் நேரத்தில் என்னால், மருத்துவமனையில் ஒரு படுக்கையையோ அல்லது சுவாசிக்க மற்றும் உயிர் வாழ ஒரு ஆக்சிஜனையோ பெறமுடியாது என்றால், 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை நான் ஏன் செலுத்த வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.