tamilnadu

img

ஆதித்யநாத் பொதுக்கூட்டத்தில் அக்லக் கொலைக் குற்றவாளிகள் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்

பிஷாரா, ஏப்.1- உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரி அருகே உள்ள பிஷாரா கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது அக்லக். இஸ்லாமிய முதியவரான இவர், மாட்டிறைச்சிவைத்திருந்தார் என்று கூறி, அவரை பாஜகவினர் மிகக் கொடூரமாக அடித்துக் கொன்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நடந்த இந்த சம்பவம்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடும் கண்டனங்கள் எழுந்தன.இதையடுத்து அக்லக்கை அடித்துக் கொன்றதாக 17 பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் சிறிது காலத்திலேயே, உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி வந்ததும், குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்தனர். இப்போது வரைஅவர்கள் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி பிஷாராவில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுள்ளது. முதல்வர் ஆதித்யநாத் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இதில், அக்லக் கொலையில் தொடர்புடைய விஷால் சிங் உள்ளிட்டமுக்கியக் குற்றவாளிகள், கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து, பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துள்ளனர். ‘பாரத் மாதா கீ ஜே’ என்றும்அப்போது அவர்கள் முழக்கமிட்டுள்ளனர். இது அங்கிருந்த பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியதுடன், தற்போது மாநிலம் முழுவதும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் கொலைக்குற்றவாளிகள் எவ்வளவு சுதந்திரமாக திரிகிறார்கள் என்பதற்கு, பிஷாரா கூட்டமேசாட்சியாகி இருக்கிறது.

;