tamilnadu

img

உத்தரகண்ட் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி?

உத்தரகண்ட்டில் பள்ளி பேருந்து தரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற பகுதியில் 18 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பலியாகி இருக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு  சென்றுள்ள மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.