நடிகர் சங்க கட்டிடத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி-நகர் அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள பிரகாசம் சாலையின் 33 அடியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுவதாக தென்னிந்திய நலச்சங்கம் சார்பாக கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை நீதிமன்றம் இந்த குற்றசாட்டு முறையாக நிரூபிக்கப்படவில்லை என கூறி தள்ளுபடி செய்த்தனர்.