tamilnadu

img

காலை 5.30 மணிக்கு தேர்தலை தொடங்கலாமே? -உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்களவைத்தேர்தலின் அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5 மணிக்கே துவங்க முடியுமா என்று உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி உள்ளது. 

வெயில் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும், ரம்ஜான் மாதம் துவங்குவதால் வாக்குப்பதிவை முன்கூட்டியே துவங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் மீனாக்‌ஷி அரோரா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி இந்த வழக்குகளின் மீது உச்சநீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று முறையிட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அனல் காற்று வீசுவதை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவை மாற்ற இயலுமா எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

மேலும் தேர்தல் வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்கலாமே என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெயில் காரணமாக பிற்பகலுக்கு பிறகு வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ரம்ஜான் மாதமும் துவங்கி உள்ளதால் காலை 7 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கே வாக்குப்பதிவை துவங்கலாமே என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த யோசனையை தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும் எனவும், இனி வரும் 3 கட்ட மக்களவை தேர்தல்களின் வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்கே துவங்க ஏற்பாடு செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.