tamilnadu

கவலைதரும் அத்துமீறல்கள் ஈரோடு எஸ்.பி.க்கு ஒரு மனம் திறந்த மடல்

அன்புடையீர் வணக்கம்,  ஈரோடு காவல்துறையின் ஜன நாயக விரோத செயல்கள் சமீப  காலங்களில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது கவ லைக்குரிய சூழ்நிலையாகும். அது வும், இந்த அத்துமீறல்கள் எல்லாம்  தங்கள் ஆசியோடுதான் நடைபெறு கிறது என்பது தெரியவருவது நிலைமை மேலும் கவலைக்குரிய தாக இருக்கிறது. குறிப்பாக, கடந்த  நூற்றாண்டின் துவக்கத்தில் மக்க ளுக்காக தொண்டாற்றிய சான்றோர் களில் அருட்பணி அந்தோணி வாட்சன் பிரபு முதன்மையானவர். கல்வி, வேலைவாய்ப்பு, பெண்க ளின் முன்னேற்றம், மக்கள் மருத்து வம், தாய் நாட்டிற்காக உயிர் தியா கம், நகரத்தின் கட்டமைப்பு வசதி கள் என்று பல துறைகளிலும் அவர்  முத்திரை பதித்தவர். அவரின் பெயரி லான சாலை கடந்த 80 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ளது. கடந்த 28.2.19 அன்று அரசு விழாவுக்காக ஈரோடு வந்திருந்த தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி, பிரபு பெயரை நீக்கியது மிகப்பெரிய அநீதியாகும்.  குறிப்பாக, ஆர்எஸ்எஸ் கூட்டம்  வடமாநிலங்களில் நிகழ்த்திவரும் அராஜகத்திற்கு ஒப்பாக இருக்கிறது. ஆகவே, அச்சாலையின் பெயர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாந கர ஆணையாளர், மாநில சிறு பான்மை ஆணையர், மாவட்ட சிறு பான்மை அலுவலருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பதில் இல்லை.

எதிர்மறை தலையீடு....
இதுதொடர்பாக கடந்த 18.6.2019 அன்று தொடர் முழக்கம் எழுப்ப காவல் துறையின் அனுமதி கேட்டோம். ஆனால், 32 காவல் தடைச் சட்டம் அமலில் உள்ளதாக குறிப்பிட்டு ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் அனுமதி மறுத்திருக்கிறார். முன்னதாக, நாங்கள் 12.5.19 தேதி அன்று ஈரோடு தெற்கு காவல் நிலையத்திற்கு விண்ணப்பம் கொடுத்து அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் 12.6.19 தேதியிட்ட கடிதத்தில் தான் காவல் துணை கண்காணிப்பாளர், 32 சட்டம்  அமலில் இருப்பதாக தெரி விக்கிறார். 32 காவல் தடை  சட்டத்தின் மீது உத்தரவு பிறப்பிக் கப்பட்டால், இது எந்த தேதியில் இருந்து எந்த தேதி வரை அமலில் இருக்கும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். உத்தரவின் நகலை அரசியல் கட்சிகளுக்கும், வெகுமக்கள் அமைப்புகளுக்கும் கொடுக்க வேண்டும். ஆகவே, இனி மேலாவது 32 காவல் தடைச்சட்டத்தை  பிறப்பிக்கும்போது அரசியல் கட்சி களுக்கும், மக்கள் அமைப்பு களுக்கும் நகல்களை உடனுக்கு டன் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதேபோல், தொடர் முழக் கத்திற்கு முன் அனுமதி பெற வில்லை என்றும், காவல்துறை கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள் ளார். தொடர் முழுக்க அனுமதி கோரிய தினம் 18.6.19. இது தொடர்பாக ஈரோடு தெற்கு காவல்  நிலையத்தில் விண்ணப்பம் கொடுத்தது 12.5.19 ஆம் தேதி யன்று. இவ்வாறு சுமார் ஒரு மாத  காலமாகியும், எந்த பதிலும் கூறாமல் இருப்பது காவல்துறையின் மெத்தனமா? மனுதாரரின் குற்றமா?  8.6.2019 அன்று காவல் துறை  கண்காணிப்பாளருக்கு விண்ணப் பம் கொடுத்து அவர் 11.6.19 அன்று  வாய்மொழியாக அனுமதி  மறுக்கிறார். அதனைத் தொடர்ந்து  12.6.19 அன்று ஈரோடு தொகுதி மக்க ளவை உறுப்பினர் ஆ. கணேசமூர்த்தி, காசிபாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் துரைராஜ் ஆகியோருடன் சென்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷிடம் அனுமதி கோரியதுடன், இப்படிப்பட்ட ஜனநாயக போராட்டங்க ளுக்கு காவல்துறை தொடர்ச்சியாக அனு மதி மறுப்பதை சுட்டிக் காட்டி இதில்  மாற்றம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். ஆனாலும், தொடர் முழக்கப் போராட்டத்திற்கு அனுமதி யளிக்கப் படவில்லை.

அஞ்சலிக்கும் அனுமதி இல்லையா?
மாவட்ட காவல்துறையில் இந்த செயல்பாடுகள் அப்பட்டமான ஜன நாயக விரோத செயலாகும். ஏனெ னில், இது முதல் முறையல்ல, கடந்த  ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் தேவாலயங்களில் நடை பெற்ற  குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக் கான அப்பாவி மக்கள் உயிரிழந் தார்கள். இதுதொடர்பாக 24.4.19 அன்று தேவாலயம் முன்பாக அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது, ஈரோடு காவல் ஆய்வாளர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி அனுமதி மறுத்தார். பிறகு நாங்கள் உள் அரங்கான பெரியார் மன்றத்தில் நடத்திக் கொள்வதாக சொன்னோம். அவர் அதற்கும் அனு மதி மறுத்தார். அதை எழுத்து மூலம் கேட்டபொழுது நீண்ட வாக்கு வாதத்திற்குப் பிறகு அடுத்த நாள்  (ஏப்.25) பெரியார் மன்றத்தில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு வாய்மொழி யாக அனுமதி கொடுத்தார். நகர காவல் உட்பட எந்த சட்டமும் மரண  ஊர்வலம், இரங்கல் நிகழ்ச்சி, திரு மணம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றிற்கு விதிவிலக்கு தருகின்றன. ஆனால் அஞ்சலி நிகழ்ச்சிக்கு கூட 1008 கெடுபிடிகள் செய்ததை இப்போது தான் பார்க்கிறோம்.

கோட்சேவுக்கு ஆதரவாக காவல்துறை...
தேசப்பிதா காந்தி படுகொலை செய்யப்பட்ட எழுபதாம் ஆண்டு  கருத்தரங்கம் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடத்த ஏற்பாடு செய்தி ருந்தோம். அன்று காலையில்தான் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் தடை உத்தரவை காவல்  துறை ஊழியர் வழங்கினார். அந்த  விழா துவங்க இருந்த நிலையில்  அங்கே போலீஸ் படை குவிக்கப் பட்டிருந்தது. மன்றத்திற்கு உள்ளே யும், வெளியேயும் இருந்த மக்களை விரட்டினார்கள். வெளிப்புற கதவை சாத்தி தாளிட்டார்கள். இதன்பின் காவல்துறையினரின் நடவடிக் கைக்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து உள்  அரங்கிற்குள் கருத்தரங்கம் நடை பெற்றது. இவ்வாறு அரங்கத்திற்குள் நடைபெறுகின்ற கூட்டத்திற்கு கூட தடை செய்கிற அளவுக்கு காவல்  துறையின் அராஜகம் தலை விரித்தாடுகிறது.

ஜனநாயக உரிமைகளை பறிப்பதா?
இதேபோல், சில தினங்களுக்கு முன்பு (ஜன.26) பேரறிவாளனின் தாய்  அற்புதம்மாளின் நிகழ்ச்சியையும் காவல்துறை சீர்குலைத்து விட்ட தாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வருத்தத்தோடு தெரிவித்தனர். கடந்த  10.6.2019 அன்று நீட் தேர்வை எதிர்த்து  வாலிபர் சங்கம் நடத்திய போராட் டத்திற்கு தமிழகம் முழுவதும் அனு மதித்த பொழுது இங்கே அனு மதிக்கவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டம்  சாதாரண மனிதனுக்கும் எழுத்து ரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை உள்ளிட்ட மனித உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஆனால், ஈரோடு மாவட்ட காவல் துறையின் செயல்பாடுகள் இதற்கு எதிர் மாறாக இருக்கின்றன. அரசு அதிகாரி களின் கடமை சட்டத்தின் ஆட்சியை  நிறுவுவதே தவிர, தனக்கு வழங் கப்பட்டுள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது என்பதை தங்களின் மேலான  கவனத்திற்கு கொண்டுவர கட மைப்பட்டுள்ளோம். இந்த உரிமை கள் எல்லாம் இந்திய மக்கள் வெள்ளையரை எதிர்த்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் விளைவாக கிடைத்தவை. இந்த உரிமைகளை யார் பறித்தாலும், எந்த வடிவில் தடுத்  தாலும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இப்படிக்கு,
ப.மாரிமுத்து 
மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு சிறுபான்மை
மக்கள் நலக்குழு