tamilnadu

img

தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஈரோடு, ஜன. 27- தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், மூலகுறும்பம்பாளையம், காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா (45).  இவரது கணவர் வேசமணி. இவர்களுக்கு 2 குழந்தை கள் உள்ளனர். இவரது கணவர் கூலிவேலை செய்து வருகிறார். சந்திராவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஈரோடு  மாவட்டம், சக்தி தாலுகா, புளியம்பட்டி பகுதியில் உள்ள பிஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்நிலையில், சந்திராவை பரிசோசித்த மருத்துவர் கள் கருப்பைச் சோதனை செய்ய வேண்டும் எனக்கூறி  உள்நோயாளியாக சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சை அளித்த இரண்டு நாட்களுக்கு பிறகு, சிறுநீர் கழிக்கும் பொழுது ரத்தக் கசிவு இருந் தது. இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது உறுப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளது எனக்கூறி 6 நாட்களாக தங்கி சிகிச்சை அளித்தனர். இவ்வாறு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு ஆகியும் முழுமையாக குணமடையாததால், அங்கிருந்து கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் குணமடையவில்லை.  இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், தவறான சிகிச்சையின் மூலம் இது நேர்ந்துள்ளது. இச்சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். எனவே தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனையின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரிய நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக கூறினார்.

;