tamilnadu

ஈரோடு எஸ்.பி., மீது ஒழுங்கு நடவடிக்கை பியூசிஎல் வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 5- ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூசிஎல் அமைப்பு வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து அமைப்பின் சார்பில் மாநிலத் தலைவர் கண. குறிஞ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், கடந்த நவம்பர் 29 ஆம் தேதி, அதிகாலை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலத் தலை வர் கண. குறிஞ்சி,‘நீரோடை’  சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவர் நில வன்,  காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.ப. பெரிய சாமி ஆகியோர் ஈரோடு மாவட்டக்  காவல்துறையால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட னர். பின்னர், சமூக, அரசியல்  செயல்பாட்டாளர்களின் அழுத்தத் தால், அன்று பிற்பகல் எந்த வழக்கும் தொடுக்கப்படாமல் அவர்கள் விடு விக்கப்பட்டனர். ஈரோட்டில், ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நவம்பர் 29 ஆம் தேதி  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது.  இதற்கு முறையாக அனுமதி கேட்டு ஒருவாரத் திற்கு முன்பே கடிதம் கொடுக் கப்பட்டும், நவ.28ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனு மதி மறுத்துவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சாச னம் வழங்கியுள்ள போராடுவதற்கான உரிமை, ஈரோடு மாவட்டக் காவல்து றையால் தொடர்ந்து நியாயமற்ற முறையில் மறுக்கப்படுவதைக் கண்டித்து, நவம்பர் 29ஆம் தேதி காலை அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துக் கோரிக்கை விண்ணப்பம் கொடுக்க இருந்த நிலையில், ஜனநா யக அமைப்புகளின்  நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். சமீப காலமாக, ஜனநாயக பூர்வ மான முற்போக்கு அமைப்புக்களின் போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதை, ஈரோடு மாவட்டக் காவல் துறை வழக்கமாக கொண்டுள்ளது. ஆனால், இந்துத்துவ அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு எந்தக் கேள்வியு மில்லாமல் அனுமதி வழங்கப்ப டுகிறது.  எனவே, இது குறித்து தமிழக காவல்துறைத் தலைவர் உடன டியாக, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், சக்தி கணேசன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பியூசிஎல் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;