ஈரோடு, ஜூன் 4-ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தலித் பெண்களுக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுகள் மறு வரையறை குழு அறிக்கையின்படி ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டின் படி 30 வார்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொது பிரிவில் 1,5,7,14,15,17,22,23,27,29,30,32,33,34,35,38,39,42,43,45,46,49,50,51,52,54 ஆகிய 26 வார்டுகளும், (பொது) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 2,6,44 ஆகிய மூன்று வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (பெண்களுக்கு) 4, 37, 53, 55 ஆகிய நான்கு வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த வார்டு மறுவரையறையில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிரிவில் உள்ள பெண்கள் மற்றும் பொது பிரிவில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.