tamilnadu

ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள்

ஈரோடு, மார்ச் 8- ஈரோட்டில் வருகின்ற மார்ச் 13 ஆம் தேதியன்று கொங்கு  பாலிடெனிக் கல்லூரியில் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் சதிஷ் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் வருகின்ற மார்ச் 13 ஆம் தேதியன்று ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர்  போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் பெருந் துறை அருகே உள்ள பாலிடெனிக் கல்லூரியில் நடை பெறவுள்ளது. இதில் முதலிடம் பிடிக்கும் அணியானது மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள முடியும். இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.  மேலும், பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து வரும் மாணவ, மாணவிகள் தங்கள் கல்லூரி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து கடிதம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.