tamilnadu

25 ஆண்டு கால ஏக்கத்துக்கு தீர்வு கிடைக்குமா? மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு, ஜன. 12- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் துக்கு உட்பட்ட சர்க்கரைபள்ளத்தில் பாலம் அமைத்துத் தர மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வ லர்கள் கூறுகையில், ஈரோடு மாவட் டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத் துக்கு உட்பட்ட கடம்பூர் மலையில், மாக்கம்பாளையம் மலை கிராமத்தில், 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மலைவாழ் மக்கள் வசித்து வருகின்ற னர். கடம்பூர்-மாக்கம்பாளையம் வழியில்,சர்க்கரைப்பள்ளம், மாமரத் துப்பள்ளம் என்ற இடத்தில், லேசான மழை பெய்தால் கூட, வெள் ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல தண்ணீர் வடியும்  வரை காத்திருக்கவேண்டியுள்ளது. மேலும் கனமழை காலங்களில் போக்குவரத்து வசதியும் நிறுத்தப் பட்டு விடும். அச்சமயம் 6 கி.மீ அடர்ந்த  வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண் டியுள்ளது. இதனால் பெரும் சிரமத் திற்கு ஆளாகி வரும் அப்பகுதி  மக்கள் சர்க்கரைபள்ளத்தில் பாலம் அமைத்துத் தர 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.  இந்நிலையில், முன்னாள் மாவட்ட  ஆட்சியர் பிரபாகர், பாலம் அமைப்ப தற்காக அரசு ரூ.30 லட்சம் நிதி ஒதுக் கீடு செய்துள்ளதாகவும், விரை வில் அதற்கான பணிகள் துவங்கப்படு மென அறிவித்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடங் கப்படாமல் இருந்து வருகிறது. மழைக் காலங்களில் அப்பகுதி மக்கள் முழுமை யாக அப்பகுதிகளை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மலை வாழ் மக்களின் சிரமங்களை கவனத் தில் கொண்டு பாலம் அமைப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் போர்க்கால அடிப்படையில் பாலம் அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;