tamilnadu

img

திருச்சி ஆட்டோ தொழிலாளர் தலைவர் தோழர் அழகப்பன் காலமானார்

சென்னை, ஜன.17- திருச்சி மாநக ரத்தில் ஆட்டோ சங்கத் தை உருவாக்கி வளர்த் தெடுத்த தோழர் அழ கப்பன் அவர்கள் மார டைப்பால் திடீர் மரணம் அடைந்ததற்கு தமிழ் நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள் ளது. சம்மேளன மாநிலத்தலைவர் வீ.குமார், பொதுச்செயலாளர் எம்.சிவாஜி ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ள தாவது: 

தோழர் அழகப்பன் அவர்கள், திருச்சியில் 1982 ல் பேருந்து நிலையம் அருகில் கல்பனா ஆட்டோ ஸ்டாண்டை அதிகாரிகளின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் உருவாக்கி, அதன்மூலம் மாவட்டம் முழுவதும்   ஆட்டோ சங்கத்தை  கட்டி வளர்த்தவர். திருச்சியில் நடைபெறும் ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். ஆட்டோ சங்கத்தின் மாநிலக்குழு  உறுப்பி னராக, மாநில நிர்வாகியாக இருந்து செயல் பட்டவர். திருச்சியில் சம்மேளன மாநாட்டை நடத்தியவர். ஆட்டோ தொழிலாளர்களை மட்டுமல்ல, அனைத்துப் பகுதி உழைப்பாளி களையும் திரட்டிபோராடியவர். சிஐடியுவின் மாவட்ட நிர்வாகியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பி னராகவும் செயல்பட்ட தோழராவார். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், பாலகிருஷ்ணன், சுப்பிரமணியன் என்ற இரு மகன்களும், தனலெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.  திருச்சி நகர ஆட்டோ தொழிலாளர்களின் மதிப்புமிக்க தலைவராக செயல்பட்ட தோழர் அழகப்பனின் மறைவானது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், திருச்சி மாவட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சிஐடியு தனது இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரி வித்துக் கொள்கிறது.

;