சென்னை, டிச. 21- இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம், விவ சாயத் தொழிலாளர்கள் சங்கம், தீண் டாமை ஒழிப்பு முன்னணி, மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடந்தது. முன்னதாக, மெட்ரோ ரயில் நிலை யத்திலிருந்து ஊர்வலமாகச் சென்ற வர்களை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தடுத்து நிறுத்திய காவல்துறை யினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்தி ரன், மாதர் சங்க மாநில பொதுச் செயலா ளர் பி.சுகந்தி, தலைவர் எஸ். வாலண் டினா, மத்தியக் குழு உறுப்பினர் அமிர்தம், மாநில நிர்வாகிகள் செல்வி, பாக்கியம், வாலிபர் சங்க மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார், செயலாளர் எஸ். பாலா, பொருளாளர் தீபா, துணைத் தலைவர் கார்த்தீஷ்குமார், மாவட்டச் செயலாளர் சரவண தமி ழன், காஞ்சி மாவட்டத் தலைவர் நந்தன், செயலாளர் புருஷோத்தமன், மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரி யப்பன், மாநில நிர்வாகிகள் இசக்கி நாக ராஜ், ஜான்சி, தீ.சந்துரு, காஞ்சி மாவட்டச் செயலாளர் தமிழ் பாரதி, மலை வாழ் மக்கள் சங்க பொதுச் செயலாளர் சரவணன், விவசாயிகள் தொழிலாளர் சங்க காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சண்முகம், விவசாயிகள் சங்க காஞ்சி புரம் மாவட்டச் செயலாளர் கே. நேரு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்த போராட்டம் குறித்து கே.சாமுவேல்ராஜ் செய்தியாளர்களி டம் கூறுகையில்,“ இந்திய இறை யாண்மை பாதுகாக்கவே அனைவரும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகிறோம்” என்றார். பொருளாதார ரீதியான தோல்வியை மூடி மறைப்பதற்காக மக்களை மத ரீதியிலான பிளவை ஏற்படுத்துவ தற்காக, கலவரத்தைத் திட்டமிட்டுத் துண் டாடுவதற்காக அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக இந்த சட் டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள் ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.