tamilnadu

img

தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையர் நடூரில் ஆய்வு

மேட்டுப்பாளையம், டிச.5-  மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கருங்கல் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு வாரத்தில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தமிழக அரசை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் கடந்த திங்களன்று அதிகாலை சொகுசு வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருந்த 20 அடி உயர சுற்றுசுவர் இடிந்து  விழுந்து 17 பேர் பரிதாபமாக உயி ரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக நேரில் விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய தலைவர் ராம்  சங்கர் காத்தரியா, துணை  தலைவர் முருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுதில்லி யில் இருந்து வியாழனன்று மேட்டுப்பாளையம் நடூருக்கு வந்து சம்பவ இடத்தை பார்வை யிட்டனர். இதன்பின்னர் வீடு  மற்றும் உடமைகளை  இழந்தவர் களிடம் நேரில் விசாரித்தனர். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் தேசிய தாழ்த்தப் பட்டோர் நல ஆணைய துணை  தலைவர் முருகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  

சுற்றுச்சுவரில் இன்னும் மீதம் இருக்கிற சுவரையும் இடிக்க தமிழக அரசிடம் கூறியுள்  ளோம். மேலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.10 லட்சம் இழப் பீடாக அறிவித்துள்ள நிலையில் தற்போது ரூ.4 லட்சம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே  மீதமுள்ள ரூ.6 லட்சமும் உட னடியாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் குடும்பத் தினருக்கு ஒரு வாரத்தில் அரசு வேலை வழங்கப்பட வேண்டு மென தமிழக அரசிடம் அறி வுறுத்தியுள்ளோம். இச்சம்பவத் தின் தொடர்ச்சியாக போராட்டத் தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.சுற்றுச் சுவரின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆய்வுக்கு பின்னரே அரசுக்கு  அறிவுறுத்தப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.