tamilnadu

img

சங்கரன்கோவிலில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் தொடங்க நடவடிக்கை : அமைச்சா் தகவல்

திருநெல்வேலி,ஜன.4- சங்கரன்கோவிலில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரி வித்துள்ளார். திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சனிக் கிழமை நடைபெற்ற விழாவில், விவசாயி களுக்கு பண்ணை இடுபொருள்களை வழங்கி அமைச்சர் பேசியதாவது:  பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பத்தினருக்கு தலா 25 நாட்டு கோழிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் 2.25 லட்சம் பேருக்கும் விலையில்லா கோழிகளும், 1.50 லட்சம் பேருக்கு விலையில்லா வெள்ளாடுகளும் வழங்கப்பட உள்ளன.

தமிழக முதல்வா் உத்தரவின்பேரில் சேலத்தில் சா்வதேச தரத்திலான கால்நடை பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.காங்கேயம், பா்கூா் பகுதியில் உள்ள நாட்டு காளையினங்கள், கன்னி, கீழக்கரிசல் ஆடுகள், சிப்பிப்பாறை, ராஜபாளையம் போன்ற நாட்டு ரக நாய்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து வகையான நாட்டின கால்நடைகளையும் இப் பூங்காவின் மூலம் பாதுகாக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதியில் ஆடுகள் வளா்ப்பு மிகவும் அதிகம். முதல்வரிடமும், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தினருடன் கலந்தாலோசித்து சங்கரன்கோவிலில் ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

;