tamilnadu

img

ஜன. 26 அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு

மாற்றுத்திறனாளர்களுக்கான அமைப்புகள் அறைகூவல்

சென்னை, ஜன. 13- ஜனவரி 26 குடியரசு தினத்  தன்று நாடு முழுவதும் அரசியல்  சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கள் நடத்த 45 மாற்றுத்திறனாளி களுக்கான உரிமை அமைப்பு கள், ஆர்வலர்கள் கூட்டாக அறை கூவல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தில்லியில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்  கையில் கூறியிருப்பதாவது: பாரபட்சம் நிறைந்த குடி யுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும்  தேசிய குடியுரிமை பதிவேடு குறித்த மத்திய அரசின் நடவ டிக்கைகளுக்கு இந்திய குடி மக்களாகிய மாற்றுத்திறனாளி களும், அவர்களின் பிரதிநிதி களுமாகிய நாங்கள் சமரசமற்ற எதிர்ப்பை இதன் மூலம் பதிவு செய்கிறோம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, நமது அரசியல் சட்டத்தின் சமத்துவம், பாரபட்சம் காட்டக் கூடாது என்பது குறித்த முக வுரையின் அடிப்படை விதி களை மீறுவதாகவும், பாரபட்சம் காட்டக்கூடியதாகவும் உள்ளது.  அடிப்படை உரிமையான குடி யுரிமை என்பது, ஒரு குறிப்பிட்ட மத அடிப்படையிலோ,  ஒரு  குறிப்பிட்ட நாட்டின் வழித்தோன் றலை அடிப்படையாகக் கொண்டோ இருக்க முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக உள்ளன.  மாற்றுத்திறனாளிகளில் பலர் பல்வேறு காரணங்களால் வீடு களில் இருந்து விலக்கப்பட்ட வர்களாக, வீடுகள் இல்லாதவர்க ளாக, கைவிடப்பட்டவர்களாக, இல்லங்களில் வாழ்நாள் முழுவ தும் வாழ்பவர்களாக இருந்து  வருகிறோம்.  எனவே மக்கள்  தொகை பதிவேட்டில் சேர்ப்ப தற்காக தயாரிக்கப்பட்டுள்ள மேற்  கண்ட கேள்விகளுக்கு விவரம்  அளிக்கவோ, ஆதாரங்களுக் கான தரவுகளை வழங்கவோ எங்களால் முடியாது.

மக்கள் தொகை கணக் கெடுப்பின் மூலம் பெறப்படும் தனி நபர் விபரங்களை இந்திய  தனித்துவ அடையாள ஆணை யம் தகவல்களுடன் ஒப்பிட்டு சரி பார்க்கப்பட உள்ளது.  ஆதார் மூலம் சேகரிக்கப்பட்ட விபரங் கள், அவைகள் ஒன்றோடு பொருந்தாமல் போனதால், பல லட்சக்கணக்கான ஏழை மாற்றுத்  திறனாளிகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங் கள் கிடைக்காமல் போன மோச மான அனுபவம் உள்ளது.  பல்  வேறு காரணங்களால் இதுவரை  ஆதார் கூட பெற முடியாமல் லட்  சக்கணக்கான மாற்றுத்திறனாளி கள் தவிக்கின்ற நிலைமை உள்ளது.  ஆதார் பரிசீலனைக்கு பின்பு  தனிநபர் விபரங்கள் உள்ளூர் மக்கள் பதிவேட்டில் பதியப்ப டும் என்பது குறித்தும் நாங்கள்  கவலை அடைகிறோம்.  பிறப்பு  சான்றிதழ்கூட பல மாற்றுத்திற னாளிகளுக்கு இல்லாத நிலை யில், எங்களில் யாராவது ஒருவர்  சந்தேகத்திற்கு உரியவர் என ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி உள்ளூர் பதிவாளர் குறிப்பிட்டுவிட்டால், மாற்றுத் திறனாளிகள் அணுக முடியாத,  தடைகள் நிறைந்த அலுவலங் கங்களுக்கு நாங்கள் ஆதா ரங்களைத் தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படும்.

இந்திய குடிமக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் பெற்ற பிறப்புச் சான்று, ஆதார்,  வாக்காளர் அட்டை, வருமான  வரிக்கான பான் அட்டை, கடவுச்  சீட்டு இவை எதையும் அசா மில் தேசிய குடியுரிமை பதி வேட்டின்போது ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  கூடுதலாக, தனி நபர் ஒருவரின் பிறப்பு விபரங்கள் மட்டும் குடியுரிமை பதிவேட்டிற்கு போது மானது கிடையாது, அவரின் பெற்றோருடைய  விபரங்களும் கொடுக்க வேண்டிய நிலைமை உள்ளதால், நாங்கள் பெரிதும்  அலைக்கழிப்புக்கு உள்ளாக் கப்பட்டு துன்புறுத்தப்படுவோம்.  எனவே, பாரபட்சமான குடி யுரிமை திருத்தச் சட்டத்தை நாங்  கள் நிராகரிக்கிறோம். இது தொடர் பாக மக்கள் தொகை பதி வேடு, குடியுரிமை பதிவேடு குறித்த அனைத்து நடவடிக்கை களையும் முழுமையாக நிறுத்த  மத்திய அரசுக்கு நாங்கள்  வேண்டுகோள் விடுக்கிறோம்.  இந்த பாரபட்ச நடவடிக்கை களுக்கு எதிராக நாடு முழுவதும்  நடைபெற்று வரும் போராட்டங்க ளுக்கு எங்களது உறுதியான ஆதரவை தெரிவித்துக் கொள்கி றோம்.

எனவே,“நாம், இந்திய  மக்கள், உறுதி கொண்டு முறைப் படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை, சமூக சமத்துவ, சமயசார்பற்ற, மக்க ளாட்சி குடியரசாக கட்டமைத்திட வும், மற்றும் இதன் எல்லா குடி மக்களுக்கும் சமூக, பொருளா தார மற்றும் அரசியல் நீதி,  எண்  ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை  மற்றும் வழிபாடு தன்செயலு ரிமை, படிநிலை மற்றும் வாய்ப்பு சமத்துவம் ஆகியன உறுதிசெய்திட மற்றும் தனிநபர்  கண்ணியத்தையும், தேசிய  ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட் டையும் உறுதிப்படுத்த அனை வரிடத்திலும் உடன்பிறப்பு ணர்வை ஊக்குவித்திட இந்திய குடியரசு தினத்தன்று நான் உறுதி ஏற்கிறேன்” என்ற உறுதி மொழி வாசகத்தை வாசித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளை நடத்திட நாடு முழுவதுமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் அமைப்பு களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;