tamilnadu

img

மக்களின் ஒற்றுமையால் ‘இருள் நீங்கட்டும்’: முத்தரசன்

சென்னை, டிச.31- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலக்குழுவின் சார்பில் தமிழக  மக்கள் அனைவருக்கு மாநிலச்  செயலாளர் இரா.முத்தரசன்  ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக் கள் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: “பழையன கழிதலும், புதியன புகுதலும்” “தை பிறந்தால் வழி பிறக்கும்” இருள் நீங்கி, புலர் பொழுது என... நமது முன்னோர்கள் வாழ்வி யல் நம்பிக்கைகளை வகுத்தனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பொழிந்த வடகிழக்கு பருவமழை யால் நீர்நிலைகள் நிறைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய  யுகம் தொழில்நுட்ப யுகமாக மாறி விட்டது. நவீன தொழில் நுட்பங்கள் அன்றாட வாழ்வியலோடு பிணைந்து விட்டது.

இணைய தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், விண்வெளி விஞ்ஞானம் என மானுடம் மகத்தான சாதனை களை புரிந்தபடி முன்னேறி கொண்டே இருக்கிறது. எனினும் இத்தொழில் நுட்பங்க ளையும் - அதன் பலன்களையும் நாடு  கடந்த நிறுவனங்களும், பன்னாட்டு நிதி மூலதனங்களும் அப்பட்டமாக அபகரிக்க துவங்கி விட்டன. இத னால் புவி முழுவதும் ஏழ்மை - செல்வ  செழிப்பிற்குமான இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் - மத்திய ஆட்சி யாளர்களின் தவறான அரசியல்  கொள்கைகளால், வரலாறு காணாத  வகையில் பொருளாதாரம் வீழ்ந்து விட்டது. ரிசர்வ் வங்கியின் வைப்புநிதி யிலிருந்துபணம் பெறும் அவலம். ஆலைகள்  மூடல், தொழிலாளர் உரிமை பறிப்பு, தற்சார்பு தொழில்  கள் நசிவு, வேளாண் விளை நிலங் கள் மீது அந்நிய படையெடுப்பு, வேலையின்மை, விலை உயர்வு,  ஊழல், மதவெறி, நாடு முழுவதும்  பெண்கள் மீதும் தலித் பழங்குடியி னர் மீதும் தாக்குதல், கல்வியில் அறிவியலுக்கு புறம்பான கருத்துக் கள் என நாடு இதுவரை காணாத அவலம் தொடர்கிறது.

அனைத்திற்கும் மேலாக பதற்ற  அரசியலை மத்திய அரசு தோற்று விக்கிறது. அண்டை நாடுகளி லிருந்து உயிர் பிழைத்து இந்தியா வில் வாழ்ந்து வரும் எளிய மக்கள் மீது தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் என கூறி பாகுபாடு காட்டு கிறது. அத்துடன் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடி மக்கள் பதிவேடு என பதற்றத்திற்கு  மேல் பதற்றத்தை தோற்றுவித்தபடி உள்ளது. தமிழ்நாட்டில் மாநில உரிமைகள்  பற்றியோ, அதன் வளர்ச்சி குறித்தோ  அக்கறை கொள்ளாமல் மத்திய அரசுக்கு அடிபணியும் போக்கே தொடர்கிறது. உள்ளாட்சி தேர்தலி லும் ஆளும் கட்சியின் வரலாறு காணாத அராஜகம், கோலமிட்டு தெரிவிக்கும் கலைபூர்வமான எதிர்ப்புகளைக் கூட தமிழக அரசு அடக்கப் பார்க்கிறது. இப்படி நாடு  முழுவதும் இடர் இருள் சூழ்ந்த நிலை யில் பிறக்கும் புதிய ஆண்டில் நாட்டு  மக்களின் ஒற்றுமையால் அவர்க ளின் போராட்டங்களால், இருள் நீங்  கட்டும். புத்தாண்டு புலரட்டும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

;