tamilnadu

img

சிபிஎம் முயற்சி: விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினருக்கு இலவச அரிசி

விழுப்புரம்,மார்ச் 28- அரசின் ஊரடங்கு உத்தரவை ஏற்று விழுப்புரம்  மாவட்ட மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.  அன்றாட கூலி தொழிலாளர்கள் உட்பட பலர் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கிராமத் தில் பகத்சிங் நகரில் ஆதியன் பழங்குடியினர் பகுதியில் 22 குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் தினந்தோறும் மக்களுக்கு தேவையான அலங்கார, வீட்டு உபயோக பொருட்களை கிராம பகுதிகளில் எடுத்து சென்று விற்பனை செய்து அதில் கிடைக்கும் சொற்ப்ப பணத்தைக் கொண்டு வாழ்க்கையில் நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோயை தடுக்கும் பொருட்டு அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவால் ஒரு வேளை உணவுக்கு வழியின்றி அவதிப்பட்டனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அந்த 22 குடும்பங்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், 22 குடும்பத்திற்கும் இலவச அரிசி வழங்கினர். மாவட்ட நிர்வாகத் திற்கும், கோட்டக்குப்பம் டிஎஸ்பி, திருச்சிற்றம்பலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

;