districts

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் போக்சோ குற்றங்கள்: மாவட்ட நிர்வாகம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துமா?

விழுப்புரம், ஜூன் 10- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  பல்வேறு காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பெண்கள், இளம் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வலியுறுத்தி இந்திய  ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்  பல்வேறு போராட்டங்கள் நடை பெற்றுள்ளன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல்  நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களில் சமீப காலமாக தொடர்ந்து சிறுமிகள் கடத்தல் என்ற புகார்க ளும், அதையொட்டி கைது செய்யப்ப வதும் தொடர்கதையாக நடை பெற்று வருகின்றன, மேலும் இது போன்ற பல சம்ப வங்கள் வெளியே வராமலும் குடும்ப  கவுரவம் பஞ்சாயத்து என்ற முறை யில் மறைக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்,

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அர கண்டநல்லூர் காவல் நிலைய சர கத்தில் சிறுமிகள் கடத்தல் என புகார்  களும், அதையொட்டி காவல்துறை 2/6/2021 சம்பவத்தில் குற்ற எண்:-  367/2021இல் சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் s/o ஆராதுரை  என்கின்ற ராஜேந்திரன் (23 ) என்ப வர் 16 வயது சிறுமியை இரவு வீட்டில்  இருந்தபோது கடத்திச் சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், சிறுமி மீட்கப்பட்டுள்ளார் 6/6/2021- குற்ற எண் :-369/ 2021இல் பரனூர் கிராமத்தைச் சேர்ந்த  வெங்கடேஷ் என்பவர் 16 வயது சிறுமியை, திருமணத்திற்கு பெண் கேட்டு கொடுக்கவில்லை என்ற கார ணத்தால் மேற்படி வெங்கடேஷ் தன்  குடும்பத்தை சேர்ந்த சுப்பிரமணி, அவரது மனைவி லட்சுமி, விஜி, வேலு, சிலம்பு, சத்தியப்பன், சுந்தரி  ஆகிய ஏழு பேரும் கடத்திச் சென்று விட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்,

சிறுமி மீட்கப்பட்டுள்ளார், 9/6/2021 பில்ராம்பட்டு கிரா மத்தை சேர்ந்த நபர்கள் சிறுமியை கடத்தியதாக வந்த புகாரின் அடிப்  படையில் சிறுமியையும் குற்றவாளி களையும் பிடித்த அரகண்டநல்லூர் காவல் துறையினர், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிர்வா கத்திடம் ஒப்படைத்துள்ளதாக காவல்  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது வந்த பதில்கள் சந்தே கத்தை எழுப்புகின்றன, 9/6/2021 அன்று தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கடத்தப்பட்டதாக வந்த  புகாரின் மீது விசாரணை நடை பெற்று வருவதாக தெரிவித்தனர். கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் அரகண்டநல்லூர் காவல்  எல்லையில் ஆலம்பாடி 1, தணிக்க லாம்பட்டு 1, குடமுருட்டி1, சித்தா மூர்1, கடகால் 1, கீழக்கொண்டூர் 1 என  6 கிராமங்களில் 6 சிறுமிகள் கடத்தல் வழக்கில் போக்சோ சட்டத்தில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குற்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் தொடர்ந்து சிறுமி கள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் ஏராளமாக நடை பெறுகின்றன,

ஒரு சிலர் மட்டும்தான்  சட்டத்தின் பார்வைக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, பெரும்பாலானவர்கள் குடும்ப கவுரவம் என்ற முறையிலும் ஊர் பஞ்சாயத்து என்ற முறையில் மறைத்து விடுகின்றனர். குற்றங்கள் மீது நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முக்கியமா னதோ, அதே அளவுக்கு குற்றங்கள் நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் முக்கி யமானவை என்றும், சிறுமிகள், பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட  விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த பகுதியில் இருந்து  அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கு 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள விழுப்புரம் செல்ல வேண்டி யுள்ளது, இதுவே பெண்கள் சிறுமி கள் மீதான வன்கொடுமைகளை சட்டத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதில் பெரும் சுமையாக உள்  ளன, ஆகவே இப்பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலை யம் அமைக்க வேண்டும் என மாதர்  சங்கத்தினரும், அப்பகுதி பொது மக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.