tamilnadu

ஆண்டு கணக்குகளை சமர்ப்பிக்காத 308 நிறுவனங்கள், குழுமங்கள்

சென்னை, ஜூலை 25- அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு உதவி பெறும் 308 நிறுவனங்கள் மற்றும் குழுமங்கள் ஆண்டு கணக்கு களை அனுப்பவில்லை என தலைமை கணக்காயரின் அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.  இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்  கைத் துறை தலைவரின் கடமைகள் அதிகாரங்கள் மற்றும் பணிமுறைமைகள் சட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும்  நிறுவனங்கள் தணிக்கை செய்யப்படப்படு கின்றன. இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் மாநில நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில் ஜூன் 2018 நிலவரப்படி, 308 தன்னாட்சி நிறுவ னங்கள் மற்றும் குழுமங்களின் 2017-18  ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுக் கணக்கு விவரங்கள் தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என தெரி விக்கப்பட்டுள்ளது. இதில் 2013-14 முதல் 2017-18 வரை  அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காம ராஜர் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்கள் ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும்  அனைவருக்கும் கல்வி திட்டம் தொடர்பாக  பெரும்பான்மையான மாவட்டங்கள் தணிக்கைத் துறைக்கு கணக்குகளை ஒப்ப டைக்கவில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. சம்பளம், பராமரிப்பு போன்ற வற்றிக்காக அரசு உதவித் தொகை பெரும்  கல்வி நிறுவனங்களே பெரும்பாலும் ஆண்டுக் கணக்குகளை அனுப்ப தவறி  உள்ளதாக அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.