tamilnadu

img

இந்நாள்... பிப்ரவரி 2 இதற்கு முன்னால்...

1709 - ராபின்சன் குரூசோ கதைக்கு அடிப்படையாக அமைந்த தாகக் கருதப்படும் அலெக்சாண்டர் செல்க்கிர்க், நான் காண்டுகள், நான்கு மாதங்கள் மனிதர்களற்ற தீவு வாழ்க்கைக்குப்பின் மீட்கப்பட்டார். கதையில், கப்பல் கவிழ்ந்ததால், ராபின்சன் குரூசோ தீவில் சிக்கினாலும், செல்க்கிர்க் அவராகத்தான் மாஸ்-அ-டியரா தீவில் இறங்கிக்கொண்டார். பாய்மரக்காலம்(ஏஜ் ஆஃப் செய்ல்) என்றழைக்கப் படும் அக்காலத்தில், கடற்கொள்ளைகள் வழக்கமானவை என்பதால், (19ஆம் நூற்றாண்டு வரையும்கூட) வணிகக் கப்பல்களிலும் ஆயு தங்கள் பொருத்தப்பட்டிருக்கும். போர்க்காலங்களில் அரசிற்கு ஆதரவாக, எதிரிகளைத் தாக்க இக்கப்பல்களுக்கு அனுமதிக்கடிதம் வழங்கப்படும். அப்படி அனுமதிபெற்றவை ‘பிரைவேட்டியர்’(தனியார் போர்க்கப்பல்?) என்றழைக்கப்படும்.

1704இல் அவ்வாறான ஒரு மோதலில், இவர் பய ணித்த கப்பல் சேதமுற்றிருந்த நிலையில், குடிநீர், உணவுப்பொருட்கள் தேவைக்காக இத்தீவில் நிறுத்தப்பட்டது. நீர் கசிந்துகொண்டிருந்த கப்பலைச் சரிசெய்யாமல் பயணிப்பது ஆபத்தானது என்று வரமறுத்த செல்க்கிர்க், கப்பல் கிளம்புவதற்குள் மனம்மாறி, வர விரும்பினாலும், கப்பல் தளபதி அனுமதிக்கவில்லை! உடைகள், படுக்கை, துப்பாக்கி, கத்தி, கோடரி, விவிலியம் உள்ளிட்டவற்றுடன் மனிதர்களற்ற அத்தீவில் தனித்துவிடப்பட்டார் செல்க்கிர்க். தொடக்கத்தில் மீன்களை உண்டா லும், கடல் சிங்கங்கள் இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வந்ததால், தீவிற்குள் செல்ல நேர்ந்து, பழங்களையும், ஆடுகளை வேட்டையாடியும் உண்டார். இரவில் எலிகள் கடித்ததால், பூனைகளுக்கருகில் படுத்துறங்கி னார். தோல்பதனிட்டு, காலணி தயாரிப்பவரான தந்தையிடமிருந்து சிறு வயதில் கற்றிருந்ததால், ஆட்டுத் தோலை உடையாக்கிக்கொண்டார்.

காலணி தேவையில்லாத அளவுக்கு கால்கள் முரடாகிப்போயின. இவரை விட்டுச்சென்ற கப்பல் ஸ்பானியர்களிடம் சிக்கியதில், அதிலி ருந்தவர்கள் கொடுமையான சிறைத் தண்டனைக்கு ஆளாயினர். இத்தீவிற்கு இருமுறை கப்பல்கள் வந்தபோதும், அவை ஸ்பானியக் கப்பல்கள் என்பதால் அவர்களிடமிருந்து தப்பிச்சென்ற செல்க்கிர்க், சமைக்கவும், தூங்கவும் இரு குடிசைகளை உருவாக்கிக்கொண்டு, தீவு வாழ்க்கைக்கே பழகிவிட்டார். 1709இல் ஒரு பிரைவேட்டியர் கப்பலால் மீட்கப்பட்ட இவர், 1711இல் இங்கிலாந்துக்கு மீண்டும் வந்தபோது 8 ஆண்டு களாகியிருந்தன. 1712இல் இவரது கதை நூலாக வெளியானதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து சில நூல்களும், 1719இல் ராபின்சன் குரூசோ நூலும் வெளியாயின. இவ்வாறு தனியாக மாட்டிக்கொள்வது அக்காலத் தில் பலருக்கும் நிகழ்ந்திருந்ததால், ராபின்சன் குரூசோ செல்க்கிர்க்கைக் குறிக்கவில்லை என்று சிலர் வாதிட்டாலும், செல்க்கிர்க் வசித்த தீவு, ராபின்சின் குரூசோ தீவு என்றே பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது!

- அறிவுக்கடல்

;