tamilnadu

img

20 ஆயிரம் பன்றிகளை கொன்று குவித்த பிலிப்பைன்ஸ் அரசு!

பிலிப்பைன்சில், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், அந்நாட்டு அரசு 20 ஆயிரம் பன்றிகளை கொன்று குவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்ட வருகிறது. இந்நிலையில், 20 ஆயிரம் பன்றிகளை அந்நாட்டு அரசு கொன்று குவித்து உள்ளது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் வேளாண்துறை செயலர் வில்லியம் தார் கூறுகையில்,  “பன்றி பண்ணைகள் சரியாக பராமரிப்பு இல்லாமல் இயங்குவதே நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாகும். தற்போதைய நிலவரப்படி, 20 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன. அவற்றில் 6,600 பன்றிகள் நோயால் பாதிக்கப்பட்டவை. மீதம் உள்ள பன்றிகள் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கொல்லப்பட்டுள்ளன. அதிகபட்சமாக புலாகான் மாகாணத்தில் உள்ள பன்றிகள் கொல்லப்பட்டுள்ளன”, என்றார்.
 

;