tamilnadu

img

டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய மருந்து அறிமுகப்படுத்திய பாகிஸ்தான்

டைபாய்டு காய்ச்சலுக்கான புதிய மருந்தை பாகிஸ்தான் அறிமுகப்படுத்தியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டைபாய்டு காய்ச்சல், சால்மொனெல்லா டைபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நடுத்தர மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், குறிப்பாக மழை நேரங்களில் இந்நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் டைபாய்டு காய்ச்சல் அதிக அளவில் பரவியது. நாடு முழுவதும் 11 ஆயிரம் மக்கள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சிந்து மாகாணத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இந்த காய்ச்சலினால் இறப்பு விகிதம் 20 சதவீதம் உயரக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில், கராச்சியில் டைபாய்டு காய்ச்சலுக்கான புதிய மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய மருந்து, உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது. வரும் நவம்பர் 18 முதல் 30-ஆம் தேதி வரை சிந்து மாகாணத்தில் உள்ள நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும் நோய்த்தடுப்பு பிரச்சாரத்தின் போது இது பயன்படுத்த உள்ளதாகவும், அதன் பிறகு பாகிஸ்தான் அரசு நாடு முழுவதும் இந்த மருத்தின் பயன்பாட்டை விரிவு படுத்தும் என்றும்  தெரிவிக்கப்பட்டது.

;