tamilnadu

img

கொரோனா பாதிப்பு... உலகளவில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய ரஷ்யா...  

மாஸ்கோ 
உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் மையம் கொண்டுள்ளது. குறிப்பாக இரண்டு நாடுகளும் குறைந்த கால அளவில் அதிக சேதாரத்தைச் சந்தித்துள்ளன. எனினும் இரண்டு நாடுகளுக்கும் கொரோனா பாதிப்பில் வேறுபாடு உள்ளது. அதாவது ரஷ்ய நாட்டில் உள்ள கொரோனா பரவல் ஓட்டப்பந்தயம் போல இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் ஜெட் விமானம் வேகத்தில் கொரோனா பரவல் பறக்கிறது. அவ்வளவு தான்.

அமெரிக்காவில் இதுவரை 13 லட்சத்து 67 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 2.56 லட்சம் பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர்.  கொரோனா எழுச்சி பெற்ற ரஷ்யாவில் அவ்வளாக பாதிப்பு இல்லை. ஆனால் கடந்த ஒரே மாதத்தில் யாரும் எதிர்பாராத வகையில் அங்கு கொரோனா பாதிப்பு 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாகக் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ரஷ்யாவில் 11 ஆயிரத்து 656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா குறுகிய காலத்தில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், ஸ்பெயின் 2-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

;