உலக முழுவதும் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை, மூன்றாம் அலை என உருவாகி வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த கொண்டே இருக்கிறது. தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பிறகும், கொரோனாவின் தாக்கம் குறையாமல் உள்ளது.
இந்நிலையில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,77,52,933 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,95,585 ஆக காணப்படுகிறது. உலக முழுவதும் ஒரே நாளில் 6,506 பேர் கொரோனாக்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் உலக அளவு அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பிரேசில் இரண்டாவதும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.