tamilnadu

img

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் இன்று காலை 6.15 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.