tamilnadu

img

தமிழ் வழியில் படித்தால்தான் அரசுப் பணியில் முன்னுரிமை: மசோதா தாக்கல்

சென்னை,மார்ச் 16- 10 மற்றும் 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே  அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோ தாவை சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் திங்க ளன்று(மார்ச் 16) கேள்வி நேரத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த  மசோதாவில்,“ தமிழக அரசுப் பணி யிடங்களுக்கு தமிழ் வழியில் பட்டப்ப டிப்பு படித்தோருக்கு இதுவரை 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும்  வகை யில் சட்டம் உள்ளது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு பெற 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தமிழ் வழியில் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. 

இந்த இடஒதுக்கீடு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இனி பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி யாக உள்ள பணியிடங்களுக்கு ஒன்னாம்  வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ் வழியில் கட்டாயம் பயின்றிருக்க வேண்டும். 12ஆம் வகுப்பை கல்வித் தகுதியாக பணி யிடங்களுக்கு அவசியம் 10,12 ஆம் வகுப்பு கல்வியை தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும். பட்டப்படிப்புக்கான பதவியிடங்க ளுக்கு 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றார். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10, 12 ஆம்  வகுப்புகளும் தமிழ் வழியில் படித்தி ருந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி அரசுப்பணி வழக்கப்படும் 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங் கப்பட உள்ளது.

;