ஆப்பிள் மேக் ப்ரோ பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்தால், இறக்குமதி வரி சலுகைகள் வழங்கப்படாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ப்ரோ கம்ப்யூட்டரின் பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்ய வரிச்சலுகைகளை ஆப்பிள் நிறுவனம், அமெரிக்க அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தது.
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் பதில் அளித்திருக்கிறார். அதில், 'மேக் ப்ரோ பாகங்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டால், அவற்றுக்கு வரிச்சலுகை அளிக்க முடியாது. முடிந்தால் வரி இல்லாமல், பாகங்களை அமெரிக்காவிலேயே உருவாக்கிக் கொள்ளுங்கள்', என டிரம்ப் ட்விட் செய்தார்.